Lucky Signs: கும்பத்தில் ஏற்படும் திரிகிரக யோகம்: லக்கி ராசிகள் இவைதான்!
கும்ப ராசியில் உருவாகும் மூன்று கிரகங்களின் சேர்க்கையால் நன்மைபெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
கும்ப ராசியில் முன்பே சனி பகவான் சஞ்சரித்து வரும் நிலையில், வரும் பிப்ரவரியில் புதன் பகவானும் சூரிய பகவானும் சஞ்சரிக்கவுள்ளனர். இப்படி மூன்று கிரகங்களின் கூட்டுச்சேர்க்கையால் திரிகிரகயோகம் உருவெடுத்துள்ளது.
இந்த கிரக சேர்க்கையால் 30 ஆண்டுகளுக்குப் பின் சில ராசியினர் நல் வாய்ப்பினைப் பெறப்போகிறார்கள். அதனால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
மேஷம்: இந்த ராசியின் 11ஆம் வீட்டில் திரிகிரக யோகம் உண்டாகியுள்ளது. ஆகையால், வாழ்வில் மேஷ ராசியினர் பெரிய முன்னேற்றத்தைப் பெறவுள்ளார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். வாழ்வில் நிம்மதி கிடைக்கும். புதிய தொழில் செய்பவர்கள் லாபத்தைச் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. கிடைக்கும் பணத்தை இக்காலத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லறத்துணையுடனான வாழ்வு இனிமையைத் தரும். சொந்த ஊரில் பூர்வீகச் சொத்துகளால் நற்பலன் கிடைக்கும்.
ரிஷபம்: இந்த ராசியின் 10ம் இடத்தில் திரிகிரகயோகம் உண்டாவதால் உங்களது உள்ளார்ந்த உழைப்புக்கு உறுதியாகப் பலன் கிடைக்கும். வெகுநாட்களாக நீங்கள் வீட்டுக்கு வாங்க நினைத்த ஃபர்னிச்சர்களை வாங்குவீர்கள். தொழில் முனைவோருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வராமல் இருந்த பணம் வரும். உறவுகளுக்கு இடையே இருந்த சிக்கல்கள் தீரும்; பகை விலகி நட்பு உருவாகும். வியாபாரிகளின் செயல் திறன் அதிகரிக்கும்.
மிதுனம்: இந்த ராசியின் 9ஆம் இடத்தில் திரிகிரகயோகம் உண்டாவதால் வேலைதொடர்பான வெளிமாநில, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் வரும். அதைப் பயன்படுத்தி நிறைய அனுபவங்களைப் பெற முயற்சியுங்கள். இது உங்களது வாழ்வில் பிற்காலத்தில் லாபத்தைப் பெற நீங்கள் போடும் விதை என்பதை அறிந்துகொள்ளுங்கள். பணியிடத்தில் உங்களுக்கு எதிராகப் பின்னப்பட்டிருந்த சதி வலைகள் உடைத்து எறியப்படும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்