தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Viruchigam Rasipalan: ‘ஆனி வரை அலர்ட்..’ விருச்சிக ராசி தமிழ் புத்தாண்டு பலன்!

Viruchigam Rasipalan: ‘ஆனி வரை அலர்ட்..’ விருச்சிக ராசி தமிழ் புத்தாண்டு பலன்!

HT Tamil Desk HT Tamil
Apr 12, 2023 10:52 AM IST

Tamil NewYear Rasipalan 2023: விருச்சிக ராசிக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.

விருச்சிகம் ராசிபலன்கள்
விருச்சிகம் ராசிபலன்கள்

தெய்வ வழிபாட்டிற்கு உரிய பலன்கள் கிடைக்கும். வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வைகாசியில் சூரிய பகவான் பல நன்மைகள் செய்து தருகிறார். கூட்டுத் தொழில் வளர்ச்சியை தரும். அதிக லாபம் தரும் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

வேலையோடு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பை பலர் பெறுவர். ஆனி மாதம் பொருளாதார ரீதியாக சில சுணக்கம் ஏற்படும். தொழில் மாற்றம், தொழில் ரீதியான அழுத்தங்கள் ஏற்படும். சுதர்சனரை வழிபாடு செய்யலாம், ஞாயிறு தோறும் சூரிய பகவானை வழிபாடு செய்யலாம்.

ஆடி, ஆவணி மாதத்தில் நன்மைகள் நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து தொழில் முன்னேறும். புரட்டாசி மாதத்தில் ராசியாதிபதி செவ்வாய் 11 ம் பாகத்தில செல்கிறார், அவருடன் சூரியனும் செல்கிறார். அதிகப்படியான பொருளாதாரம் வளர்ச்சியடையும். குரு வக்கிரகதியடைவதால் திருமண பாக்கியம் கை கூடும். உறவுகள் அமையும், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஐப்பசியில் இது தொடரும்.

கார்த்திகையில் புது உத்வேகம் கிடைக்கும். தேங்கி கிடக்கும் பணியை விரைந்து முடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்கழி மாதத்தில் தெய்வ வழிபாடு செய்யும் அற்புதமாதமாகும். சந்திரன் நல்ல பெயர்ச்சியை தருவதால் நன்மைகள் நடக்கும். எதிரிகளை துவம்சம் செய்வது, எதிரகள் வியக்கும் அளவிலான வளர்ச்சி, வாடகை சுமை குறைவது என சுபமான நிகழ்வுகளை தை மாதத்தில் சந்திக்கலாம்.

மாசி மாதத்தில் அர்தாஷ்டம சனியாக சனி பகவான் பெயர்ச்சியடைகிறார். உடன் சூரியனும் பெயர்வதால், உபாதைகள் குறையும். சனி பகவான் வழிபாடு நன்மை தரும். பைரவ வழிபாடு, சுதர்சன வழிபாடு, சூரிய வழிபாடு விருச்சிக ராசியினருக்கு பெரிய பலன் தரும். சனி தோறும் எள் தீப அர்ச்சனையை சனி பகவானுக்கு மேற்கொள்ளலாம். சூரியனுக்கு செம்பருத்தி வழிபாடு செய்யலாம். சோபகிருது புத்தாண்டு விருச்சிகராசிக்கு சூரிய வழிபாடு பெரிய பலன் தரும். 

WhatsApp channel

டாபிக்ஸ்