தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tamil New Year Rasipalan: ‘முரட்டு சிங்கிள்களுக்கு காதல் கைக்கூடும்!’ மீன ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள்!

Tamil New year Rasipalan: ‘முரட்டு சிங்கிள்களுக்கு காதல் கைக்கூடும்!’ மீன ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள்!

Kathiravan V HT Tamil
Apr 08, 2024 04:31 PM IST

“Tamil New year Rasipalan 2024: உத்யோகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். உத்யோகத்தில் இட மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம் போன்ற மாற்றங்களுக்கு தயாராகி கொள்ளுங்கள்”

மீனம்
மீனம்

ஏழரை சனியில் ஆரம்பத்தில் உள்ளதால் மீன ராசிக்காரர்கள் கழுத்து முதல் தலை வரை உள்ள உறுப்புகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும் போது தவறாமல் தலைக்கவசம் அணிவது அவசியம். 

போககாரகனான ராகு உங்கள் ராசியில் உள்ளதால் செல் போனால் அதிக பாதிப்புக்களை சந்திக்கும் சூழல் உண்டாகும். ஆனால் அதே சமயம் திருமண அமைப்பும், சுபகாரிய அமைப்புக்களும் கைக்கூடும். பிரிந்த தம்பதிக்கள் ஒன்று சேர்வார்கள், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும், காதலியோ, காதலனோ இல்லாதவர்களுக்கு நேசிக்க கூடியவர்களின் துணை ஏற்படும். 

தொழில் மற்றும் உத்யோகத்தில் லாபம் ஏற்பட்டு பணவரவு அதிகரிக்கும். பெற்றோர், பெரியோரின் பூர்வீக சொத்து பிரச்னைகள் தீரூம். தொலைத்தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். 

உத்யோகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். உத்யோகத்தில் இட மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம் போன்ற மாற்றங்களுக்கு தயாராகி கொள்ளுங்கள். 

ஜென்மத்தில் ராகுவும், 7ஆம் இடத்தில் கேதுவும் உள்ளதால் குடும்பத்தில் கோபதாபங்கள் இல்லாமல் விட்டுக்கொடுப்பது நல்லது. 

ராகு கிரகத்தால் மன அழுத்தம், ஜீரண கோளாறு உள்ளிட்டவை உண்டாகும் என்பதால் இரவு 7 மணிக்குள்ளாகவே இரவு உணவை முடித்துக் கொள்வது நலம் தரும். 

ராகுவால் வாழ்கையில் அதிர்ஷ்டம் உண்டாகும். பெரிய அளவுக்கான மாற்றம் ஏற்படும். உங்கள் ஜாதகம் லாட்டரி சீட்டுக்கள் மூலம் லாபம் கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று குடியேறும் அமைப்பும் மீனராசிக்கு உண்டு. 

மீன ராசிக்காரர்கள் நரசிம்மர் வழிபாடு செய்வது, நரசிம்மர் காயத்ரி மந்திரம் கேட்பதும் நன்மைகளை ஏற்படுத்தும். 

குரோதி வருட பொதுப்பலன்கள்

குரோதி ஆண்டை பொறுத்தவரை உலகம் முழுவதும் மருத்துவ துறையில் பெரும் புரட்சி ஏற்படும். உலக அளவில் அரசியல், தொழில், வணிகம், சினிமா உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய பதவிகளுக்கு பெண்கள் வரக்கூடிய சூழல் உண்டாகும்.

மீடியா மற்றும் சமூகவலைத்தளங்கள் சார்ந்த வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும். உலக அளவில் போர் மேகங்கள் சூழும், வரிவிதிப்புகளால் மக்கள் பாதிக்கப்படுவர்.

நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்து வைப்பது நலம் தரும், ஆண்டு பிறப்பின் சில மாதம் பங்குகளின் விலை ஓரளவுக்கு உயரும், பின்னர் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் ஷேர்மார்க்கெட்டில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

வறட்சியும், தண்ணீர் பஞ்சமும் ஏற்படும், நெருப்புகளால் பாதிப்புகள் உண்டாகும், ரயில் மற்றும் கடல் மார்க்க விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel