தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Saturn And Venus: கும்பத்தில் சனி மற்றும் சுக்கிரன் இணைவு.. வெற்றிவாகை சூடப்போகும் ராசிகள்!

Saturn and Venus: கும்பத்தில் சனி மற்றும் சுக்கிரன் இணைவு.. வெற்றிவாகை சூடப்போகும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Mar 04, 2024 07:27 AM IST

கும்பராசியில் சனி பகவானும் சுக்கிரனும் ஒன்றாக சஞ்சரிக்கப்போகிறார். இதனால் கிடைக்கப்போகும் சுப பலன்களைக் காண்போம்.

கும்ப ராசி
கும்ப ராசி

ரிஷபம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனால் வாழ்வில் மகிழ்ச்சியான காலகட்டம் உருவாகப் போகிறது. புதிய தொழில் செய்ய ஏற்றகாலகட்டம் இது. இத்தனை நாட்களாக,நீங்கள் தொட்டு தடைபட்டுப்போன விஷயங்கள் வெல்லப்போகின்றன. பிறரிடம் மாட்டிக்கொண்ட உங்கள் பணம், மீண்டும் கிடைக்கவாய்ப்புள்ளது.

கடகம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால் காதல் கைகூடும். கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் மறையும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். வாழ்வில் பெரும் மாற்றத்தைப் பெறப்போகிறீர்கள். உங்களின் வங்கி இருப்பில் பொருளாதார நிலை முன்பைவிட மேம்படும்.

துலாம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையால், தொழிலில் இருந்து வந்த மந்தத் தன்மை மாறும். பொருளாதாரம் மேம்படும். ஊதிய உயர்வு ஏற்படும். வீடு, வண்டி வாங்கலாம். அப்பாவின் ஊரில் இருந்து உறவினர்களின் அன்பு பெருகும்.

மகரம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால் நல்ல பலன்கள் கிட்டும். தொழிலில் மகிழ்ச்சிக்குரிய நிறுவனங்கள் இடமிருந்து வாய்ப்புகள் வரும். வாழ்வில் பணக்காரராக உருவாவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். இல்லறத்துணையுடனான ரிலேஷன்ஷிப் மேம்படும்.

கும்பம்: கும்பத்தில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் பணியில் இருப்பவர்கள் நீண்டநாட்கள் முயற்சித்த டிரான்ஸ்ஃபர் கிடைக்கும். ஆரோக்கியமான பணிச்சூழல் உண்டாகும். மாமியார் மருமகள் சண்டை தீரும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் வசதிகள் கூடும். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்