தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு.. ஆன்லைனின் முன்பதிவு செய்வது எப்படி? - இதோ விபரம்!

Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு.. ஆன்லைனின் முன்பதிவு செய்வது எப்படி? - இதோ விபரம்!

Karthikeyan S HT Tamil
Feb 13, 2024 08:35 AM IST

Sabarimala Ayyappa Temple: மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை (பிப்.13) திறக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த விழாக் காலங்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதம் மற்றும் மலையாள மாத பிறப்பின் போதும் முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மாதந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. மலையாள மாதத்தின் கும்பம் மற்றும் தமிழ் மாதத்தின் மாசி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (பிப்.13) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு சரியாக நடை திறக்கப்பட்டு புதிய மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றி வைக்கிறார். இதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் 18ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் வழக்கான பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைகளுக்காக ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். www.sabarimala.org.in என்ற இணையதள முகவரியிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம் எனவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உட்பட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜனவரி 20 ஆம் தேதி நடை சாத்தப்பட்ட நிலையில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசன் செய்தனர். இந்த நிலையில், மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை (பிப்.13) திறக்கப்பட உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்