தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu - Venus: ராகு - சுக்கிரன் சேர்க்கை: சுறுசுறுப்பாக தொழில் செய்யப்போகும் ராசிகள்!

Rahu - Venus: ராகு - சுக்கிரன் சேர்க்கை: சுறுசுறுப்பாக தொழில் செய்யப்போகும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Jan 27, 2024 04:58 PM IST

ராகு - சுக்கிரன் சேர்க்கையால் சுறுசுறுப்பாக தொழில் செய்யப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

ராகு - சுக்கிரன் சேர்க்கை: சுறுசுறுப்பாக தொழில் செய்யப்போகும் ராசிகள்
ராகு - சுக்கிரன் சேர்க்கை: சுறுசுறுப்பாக தொழில் செய்யப்போகும் ராசிகள்

ரிஷபம்: ராகு மற்றும் சுக்கிரனின் இணைவால் ரிஷபராசியினருக்குக் கடந்த காலத்தைவிட லாபம் அதிகரிக்கும். வெகுநாட்களாக நினைத்து இருந்த உங்கள் கடையின் கிளையை இக்கால கட்டத்தில் திறப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிணக்குகள் மறையும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் லாபத்தை அள்ளலாம். உங்கள் வங்கிக்கணக்கில் இருப்பு கூடும்.

மிதுனம்: வெகுநாட்களாக நற்பலன்களைப் பெறாமல் தவித்து வந்த மிதுனராசியினரே, தொழிலில் சிறந்த வெற்றியைப் பெறும் காலகட்டம் வந்துவிட்டது. ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் நின்றுபோன திருமணம் கூட நடக்கும். நீங்கள் பணி தேடிக்கொண்டிருந்தால் ஊதிய உயர்வுடன்கூடிய பணி வாய்ப்பு கிடைக்கும். வெகுநாட்களாக கிடைக்காமல் வில்லங்கத்தில் இருந்த பூர்வீக வீடு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில் செய்பவர்களுக்கு நிறைய கஷ்டமர்கள் கிடைப்பார்கள்.

தனுசு: இந்த ராசியினருக்கு, ஜோதிடப்படி நான்காம் வீட்டில் ராகுவும் சுக்கிரனும் இணைகின்றனர். இந்த காலகட்டத்தில் வீட்டில் இருந்த சண்டை சச்சரவுகள் குறையும். வீடு, வீட்டடி மனைகளை வாங்கி விற்க ஏற்ற காலம் இது என்பதால், கையில் லாபம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார ரீதியாக முன்னேறுவீர்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்