தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஜூன் ரிஷப குறி.. பணத்தை மூட்டையாக அள்ளப் போகும் ராசிகள்.. இந்த ராசிகளுக்கு கிடைப்பது உறுதி

ஜூன் ரிஷப குறி.. பணத்தை மூட்டையாக அள்ளப் போகும் ராசிகள்.. இந்த ராசிகளுக்கு கிடைப்பது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
May 08, 2024 03:49 PM IST

June: மே மாதம் பத்தாம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைகிறார். அதற்குப் பிறகு இந்த மாத இறுதியான மே 31ம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். அதை சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். ரிஷப ராசிக்கு செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

புதன் பகவானால் பணத்தை மூட்டையாக அள்ளப் போகும் ராசிகள்
புதன் பகவானால் பணத்தை மூட்டையாக அள்ளப் போகும் ராசிகள்

வருகின்ற மே மாதம் பத்தாம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைகிறார். அதற்குப் பிறகு இந்த மாத இறுதியான மே 31ம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். அதை சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். ரிஷப ராசிக்கு செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் புதன் பகவான் முதல் வீட்டில் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு ஜாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் உண்டு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க போகின்றது. நிதி ரீதியாக முன்னேற்றம் அதிகம் உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சுத் திறமையாள் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel