தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ரிஷபத்தில் புரட்சி ஆரம்பம்.. புரட்டிப் போடும் புதன்.. 3 ராசிகளுக்கு பணமழை நிச்சயம் உண்டு

ரிஷபத்தில் புரட்சி ஆரம்பம்.. புரட்டிப் போடும் புதன்.. 3 ராசிகளுக்கு பணமழை நிச்சயம் உண்டு

Suriyakumar Jayabalan HT Tamil
May 09, 2024 12:08 PM IST

Lord Mercury: புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று அதாவது நாளை மேஷ ராசியில் நுழைகின்றார். இந்த மாத இறுதிவரை இதே ராசியில் பயணம் செய்வார்.

புரட்டிப் போடும் புதன் பகவானால் 3 ராசிகளுக்கு பணமழை நிச்சயம் உண்டு
புரட்டிப் போடும் புதன் பகவானால் 3 ராசிகளுக்கு பணமழை நிச்சயம் உண்டு

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று அதாவது நாளை மேஷ ராசியில் நுழைகின்றார். இந்த மாத இறுதிவரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு சுக்கிர பகவானின் ராசி ஆன ரிஷப ராசியில் நுழைகின்றார்.

அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முழுமையான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நடக்கின்றது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும். ஆளுமை அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் அனைத்தும் சரியாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியை தேடி தரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிரசத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் உங்களைத் தேடி வரும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். பேச்சுத் திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel