தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி 2025 வரை விரட்டுவார்.. பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் ஏற்படும் மகிழ்ச்சி.. உங்க ராசி இதில் இருக்கா?

சனி 2025 வரை விரட்டுவார்.. பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் ஏற்படும் மகிழ்ச்சி.. உங்க ராசி இதில் இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 24, 2024 10:43 AM IST

Lord Saturn: சனி 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். சனிபகவான். அதுவரை சில ராசிகளுக்கு ராஜயோகத்தை மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

சனி
சனி

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கர்ம பலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.

இது இவருடைய சொந்தமான ராசி ஆகும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அடுத்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் ஒவ்வொரு செயலும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். சனிபகவான். அதுவரை சில ராசிகளுக்கு ராஜயோகத்தை மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் இடமாற்றம் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். திடீரென எதிர்பாராத நேரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 2025 வரை உங்களுக்கு மகிழ்ச்சியான யோகம் கிடைக்கும். உறவினர்களால் உதவி கிடைக்கும். நண்பர்களால் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்திருக்கும் வாழ்க்கை துணை ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

சனி பகவானின் பயணமானது உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் அதிகப்படியான லாபம் உங்களுக்கு கிடைக்கும். இருப்பினும் நீங்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய வருமானத்திற்கான வழிகள் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களை நம்பி ஏமாறக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

 

சனி பகவானின் பயணத்தால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிக்கனமாக இருப்பது நல்லது. அனைத்து செலவுகளும் உங்களுக்கும் மங்களகரமான செயலாக அமையும். வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

சனி பகவானால் உங்களுக்கு வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு லாபகரமானதாக அனைத்து செயல்பாடுகளும் அமையும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஜாதகமாக செயல்படுவார்கள். வாழ்க்கையில் அவ்வப்போது சிறு ஏற்றங்கள் இறக்கங்கள் ஏற்படலாம். அதை கண்டுகொள்ளாமல் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவித்தால் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel