தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The Zodiac Signs That Are Going To Enjoy The Fortune Of Guru Bhagavan To The Fullest

Guru Peyarchi: ரிஷபத்தில் நுழையும் குரு.. பண மழையில் குளிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 23, 2024 12:33 PM IST

குரு பகவானின் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுப்பார். இவருடைய இடமாற்றத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகும். குருபகவான் செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசிக்குள் செல்கின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் செய்யும் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் சாதகமான சூழ்நிலையை உருவாக்க போகின்றார். அனைத்து விதமான வேலைகளிலும் மங்கலமான சூழ்நிலை உண்டாகும். சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வாய்ப்புக்கான வழிகள் உண்டாகும். நல்ல மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான ஆதாயங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

 

குருபகவானின் அதிர்ஷ்டம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். குரு பகவானின் மரியாதைக்குரிய பலன்கள் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும். நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

தனுசு ராசி

 

குருபகவான் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். மிகப்பெரிய நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். வருமான அதிகரிக்கும். வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் உங்களுக்கு உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற கூடிய சூழ்நிலை உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel