தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குபேரனின் ஆசிர்வாதத்தை அப்படியே பெறுகின்ற ராசிகள்.. பணத்தில் நீங்கள் குளிப்பது உறுதி

குபேரனின் ஆசிர்வாதத்தை அப்படியே பெறுகின்ற ராசிகள்.. பணத்தில் நீங்கள் குளிப்பது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
May 09, 2024 04:37 PM IST

Lord Kubera bhagavan: குபேர பகவானின் அருள் ஆசி இருந்தால் வாழ்க்கையில் எப்போதும் செல்வ செழிப்பிற்கு குறை இருக்காது. சிலர் வீட்டில் குபேரர் சிலையை வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் குபேரனின் அருள் ஆசியைப் பெற்ற சில ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

குபேரனின் ஆசிர்வாதத்தை அப்படியே பெறுகின்ற ராசிகள்
குபேரனின் ஆசிர்வாதத்தை அப்படியே பெறுகின்ற ராசிகள்

நவக்கிரகங்களின் செயல்பாடுகளால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் அந்தந்த ராசிகள் ஒரு சில தெய்வங்களின் அனுகிரகத்தோடு இருப்பார்கள். லட்சுமிதேவி செல்வத்தின் தாயாக திகழ்ந்து வருகின்றார்கள். அதேபோல குபேரனும் செல்வத்தின் கடவுளாகத் திகழ்ந்து வருகின்றார்.

செல்வத்தின் தேவைக்காக லட்சுமி மற்றும் குபேரன் ஆகிய இரண்டு கடவுள்களையும் அனைவரும் வணங்குவது வழக்கம். இவர்களை வணங்குவது செல்வத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

குபேர பகவானின் அருள் ஆசி இருந்தால் வாழ்க்கையில் எப்போதும் செல்வ செழிப்பிற்கு குறை இருக்காது. சிலர் வீட்டில் குபேரர் சிலையை வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் குபேரனின் அருள் ஆசியைப் பெற்ற சில ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிரன் திகழ்ந்து வருகின்றார். இதனால் உங்களுக்கு செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. குபேரனின் அருள் ஆசி எப்போதும் இருக்கும். எங்கள் வாழ்க்கையில் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குபேர நாள் வாழ்க்கையில் ஏற்படும். கஷ்டங்கள் எளிதில் மறைந்துவிடும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அன்பு அதிகரிக்கும். ஏனென்றால் குபேரனின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். லட்சுமி தேவியை வணங்கினால் உங்களுக்கு செல்வ செழிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

கடக ராசி

 

சந்திர பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். கடின உழைப்பில் எப்போதும் நீங்கள் கண்ணோடு இருப்பீர்கள். திறமையால் அனைத்தும் வெற்றியடைய கூடும். குபேரனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருப்பதால் அதிகப்படியான செல்வம் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும். சிறிய வாய்ப்பாக இருந்தாலும் பணம் சம்பாதிப்பதற்கான அனைத்து வழிகளையும் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். புத்திசாலித்தனம் மற்றும் திறமை இவை அனைத்தும் உங்களுக்கு செல்வத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். லட்சுமிதேவியின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கின்ற காரணத்தினால் குபேர யோகம் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வருவதற்கு காரணம் குபேரனின் ஆசிர்வாதம் இருக்கின்றது காரணத்தினால் தான்.

தனுசு ராசி

 

குருபகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள் உங்களுக்கு எப்போதும் குபேரனின் அருள் ஆசி இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். குபேரனின் அருள் மழையால் உங்களுக்கு செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்து கொண்டே இருக்கும். கடின உழைப்புக்கு நீங்கள் எப்போதும் அஞ்சுவது கிடையாது. அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்வில் பல்வேறு இன்பங்கள் உங்களுக்கு கிடைக்கும். இதனால் உங்களுக்கு பணவரவு இருந்து கொண்டே இருக்கும். குபேரனை நீங்கள் வழிபட்டால் உங்களுக்கு செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel