தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pooventhiya Nathar: குழந்தை பாக்கியம் தரும் தலம்!

Pooventhiya Nathar: குழந்தை பாக்கியம் தரும் தலம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 02, 2023 06:41 PM IST

பூமியிலிருந்து கிடைத்த ஸ்ரீ பூவேந்திய நாதர் கோயில் குறித்து இங்கே காண்போம்.

ஸ்ரீ பூவேந்திய நாதர் கோயில்
ஸ்ரீ பூவேந்திய நாதர் கோயில்

இதனை அடுத்து கலசம் தட்டிய இடத்தில் மணலை தோண்டிய போது அழகிய வடிவமைப்பில் இருந்த ஸ்ரீ பூவேந்திய நாதர், ஸ்ரீ பவளவள்ளி அம்பாள் உருவங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதை அறிந்த சேதுபதி மன்னர்கள் மிகப்பெரிய அளவில் மணலை அகற்றிய பொழுது புதையுண்ட மாபெரும் கோயில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த ஆலயத்திற்கு உள்ளே அளப்பரிய பூமிக்குள் தெப்பக்குளம் மற்றும் இன்னும் பல சிறப்பு ஆலயங்கள் பொக்கிஷங்களாக புதைந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். சுயம்புவாக உருவான ஸ்ரீ பூவேந்திய நாதன் இப்பகுதியில் அருள் பாலிக்கும் தெய்வங்களாக விளங்கி வருகின்றார்..

இவ்வாலயத்தின் தல விருட்சமாக முன்னை மரம் விளங்கி வருகிறது. பால், தயிர், தேன், இளநீர், சர்க்கரை, சந்தனம், பன்னீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ, கஸ்தூரி, எண்ணெய், தைலம் , விபூதி உள்ளிட்ட 21 வகையான அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

சூரியன், ஐயப்பன், சந்திரன், பைரவர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதியாக பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். பங்குனி மாதம் 26 ஆம் தேதி முதல் சித்திரை ஆறாம் தேதி வரை 10 நாள் திருவிழா, வலை வீசும் படலம், திருக்கல்யாணம், சுவாமி அம்பாளின் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா, தீர்த்தவாரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

சித்ரா பௌர்ணமி திருக்கல்யாணம் திருவிழா இவ்வாலத்திலும் நடைபெறுகின்றது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், எதிரிகளால் ஏற்படும் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய இக்கோயிலுக்கு வந்தால் தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர். ராமபிரான் மாரிச்சனை வதம் செய்த இடம் எது என்பதாலேயே மோட்சம் பெற மாரியூர் என்று இப்பகுதி அழைக்க காரணமானது.

WhatsApp channel