தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Vakra Angry: உச்ச வக்ர சனியிடம் சிக்கிய 3 ராசிக்காரர்கள்!

Sani Vakra Angry: உச்ச வக்ர சனியிடம் சிக்கிய 3 ராசிக்காரர்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 13, 2023 10:52 AM IST

சனிபகவானால் சிக்கலைச் சந்திக்கப் போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனி வக்ரப் பெயர்ச்சி
சனி வக்ரப் பெயர்ச்சி

சனிபகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்து வருகிறார். ஜூலை 17ஆம் தேதி முதல் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.

மெதுவாக நகரக்கூடிய கிரகங்களில் ஒன்றான சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் பயணம் செய்வார். சில மாதங்கள் மட்டுமே வக்ரமடைவார். இதனால் சில ராசிகளுக்குக் கஷ்டமான சூழ்நிலை அமைந்துள்ளது.

மகர ராசி

 

சனி வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்கு சில சிக்கல்கள் ஏற்பட உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சி செய்யும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக வேண்டும். கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

கும்ப ராசி

 

ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வக்ர சனியின் கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கியுள்ளது. மருத்துவர் பரிந்துரையை ஏற்பது நல்லது. மதுவைக் கைவிட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பல்வேறு விதமான கெட்ட செய்திகள் வந்தாலும் மனம் தளராமல் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மீன ராசி

 

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் சனி பகவானின் வேலை ஆரம்பித்து விட்டது. உடற்பயிற்சி செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனம் தேவை. உங்களைச் சேதப்படுத்தச் சனி பகவான் தயாராக இருக்கிறார். மனம் தளராமல் தைரியமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. சரியான நிபுணரை அணுகித் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்.)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்