தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு சுக்கிரன் அஸ்தமனத்தில் அடி.. மாட்டிக்கொண்ட ராசிகள்.. தலைகீழாக தொங்கப் போவது உறுதி

குரு சுக்கிரன் அஸ்தமனத்தில் அடி.. மாட்டிக்கொண்ட ராசிகள்.. தலைகீழாக தொங்கப் போவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
May 08, 2024 04:41 PM IST

Guru and Venus: குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். அதேசமயம் மே மாதம் ஏழாம் தேதி அன்று சுக்கிரன் அஸ்தமன நிலையில் ரிஷபத்தில் நுழைந்தார்.

குரு சுக்கிரன் அஸ்தமனத்தில் மாட்டிக்கொண்ட ராசிகள்..
குரு சுக்கிரன் அஸ்தமனத்தில் மாட்டிக்கொண்ட ராசிகள்..

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான் இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார். இவர் ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். அதேசமயம் மே மாதம் ஏழாம் தேதி அன்று சுக்கிரன் அஸ்தமன நிலையில் ரிஷபத்தில் நுழைந்தார்.

குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்த வருகின்றனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நிலையில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் அஸ்தமன நிலையில் சேர்ந்து பயணம் செய்த வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படா அதிக வாய்ப்பு உள்ளது. கடினமான உழைப்பை கொடுத்தாலும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்கள் தான் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும். மிகுந்த மன அழுத்தம் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரம் மந்தமான சூழ்நிலையை பெற்று இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும்.

சிம்ம ராசி

 

குரு சுக்கிரன் அஸ்தமனத்தால் பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். குழந்தைகளால் உங்களுக்கு கவலைகள் நிறைந்த சூழ்நிலைகளை நீங்கள் அனுபவிக்கப் போகின்றீர்கள். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடின உழைப்பு உங்களுக்கு எந்த பலன்களையும் பெற்று தராது. இலக்குகளை அடைவதற்கு சற்று தாமதமாகவும் வேலை செய்யும் இடத்தில் பெரிய திருப்தி இருக்காது. 

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணத்தை இப்போது சேமிக்க முடியாது. வாழ்க்கை துணையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி

 

குரு சுக்கிரன் அஸ்தமன நிலையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் மிகப்பெரிய பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. பணம் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கை துணையின் உறவால் உங்களுக்கு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். 

கருத்து வேறுபாடுகள் ஏற்படப்படும். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். உடன் இருப்பவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி முன்னேற்றத்தை காண்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel