தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குபேர யோகம் கொட்டுது.. குரு ஆசிர்வாதம் பெற்ற ராசிகள் இவர்கள்தான்.. நீங்க என்ன ராசி?

குபேர யோகம் கொட்டுது.. குரு ஆசிர்வாதம் பெற்ற ராசிகள் இவர்கள்தான்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
May 08, 2024 05:53 PM IST

Kubera Yoga: மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

குரு பகவானின் குபேர யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள்
குரு பகவானின் குபேர யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள்

இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் மாற்றம் எதுவும் நிகழவில்லை. குரு பகவானின் இடமாற்றம் மட்டுமே வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் குபேர யோகத்தை பெற்றுள்ளன. அந்த வகையில் குபேர யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குபேர யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு குரு பகவான் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். தொழிலில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எடுத்த காரியங்கள் அனைத்தும். வெற்றியடையும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் தேவையற்ற செலவுகள் குறைந்து விடும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குபேர யோகம் உருவாக்கியுள்ளது. குருபகவானால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டு வணிக முறை நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குபேர யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு செல்வம் அதிகரிக்க போகின்றது. குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தினருடன் நல்ல நேரம் செலவிடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் முன்னேற்றத்தை பெற்றுத்தரும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள், கல்விக்காக குழந்தைகள் வெளிநாடுகள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel