தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Budhan Luck: புதனால் பண யோகத்தில் குளிக்கப்போகும் ராசிகள்

Budhan Luck: புதனால் பண யோகத்தில் குளிக்கப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 21, 2023 11:31 AM IST

புதன் பகவானால் யோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

செப்டம்பர் 16ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். புதன் பகவானின் வக்ர நிவர்த்தியால் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சிக்கல்கள் அனைத்தும் குறையும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களிடையே அந்தஸ்து அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சலுகைகள் உங்களைத் தேடி வரும். அவசரப்படாமல் செயல்பட்டால் நன்மை உங்களுக்கு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்ம ராசி

 

நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். எதிரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய முதலீடு உங்களுக்கு நற்பலன்களை பெற்றுத் தரும். உண்டாகும் உங்கள் எண்ணம் வெற்றி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்