தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bad Luck: சூரியன் செவ்வாயால் சிரமப்படும் ராசிகள்

Bad Luck: சூரியன் செவ்வாயால் சிரமப்படும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 21, 2023 12:33 PM IST

சூரியன், செவ்வாய் கிரகங்களால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சூரியன், செவ்வாய்
சூரியன், செவ்வாய்

நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று கன்னி ராசிக்குள் நுழைந்தார். இதனால் தற்போது கன்னி ராசியில் இருக்கும் செவ்வாயோடு சூரிய பகவான் சேர்ந்துள்ளார்.

சூரியன் மற்றும் செவ்வாய் பகவானின் சேர்க்கையால் விஷயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

சூரியன் மற்றும் செவ்வாய் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் இணைகின்றனர். இதனால் வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ரிஷப ராசி

 

இந்த விஷ யோகம் உங்களுக்கு சில மோசமான தருணங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி

 

இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மற்றவர்களிடத்தில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்