தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Yoga: சனியும் புதனும் கொட்டும் பணமழை உங்களுக்கு தான்

Money Yoga: சனியும் புதனும் கொட்டும் பணமழை உங்களுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 21, 2023 10:35 AM IST

சனி, புதன் பகவானால் பலன்களை பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனி, புதன்
சனி, புதன்

சனிபகவான் கும்ப ராசியிலும், புதன் பகவான் சிம்ம ராசியிலும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அன்று சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு சென்றதால் புதன் பகவானுக்கு வலிமை அதிகமாகியுள்ளது. இந்த இரண்டு கிரகங்களால் உருவான யோகத்தால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசிகள் புதன் பகவான் ஐந்தாம் வீட்டிலும் சனிபகவான் 11ஆம் வீட்டிலும் இருக்கின்றனர். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேற அதிக வாய்ப்புள்ளது. ஆசைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் சனி பகவான் ஏழாம் வீட்டிலும், புதன் பகவான் முதல் வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றனர். இதனால் தீர்க்கமான முடிவுகள் எடுக்க உங்களது. மன நிலையும் சரியான நிலைமையில் மாறும். நல்ல முடிவுகள் மிகப்பெரிய வெற்றியை தேடி தரும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையால் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது.

கும்ப ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டிலும் சனி பகவான் முதல் வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த சிக்கல்களும் ஏற்படாது. குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்