Mesham Rasi Celebrities: முகேஷ் அம்பானி முதல் ராணி முகர்ஜி வரை…! மேஷ ராசியில் பிறந்த பிரபலங்கள்…!
”செவ்வாய் கிரகத்தில் அருள் பெற்ற மேஷ ராசிக்காரர்களின் நற்பண்புகள் அவர்களுடைய தனித்த அடையாளமாக இருக்கும்”
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசிக்காரர்களின் நற்பண்புகள் அவர்களுடைய தனித்த அடையாளமாக இருக்கும். அவர்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று சாதனையாளர்களாக உள்ளனர்.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரக உள்ள ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மேஷம் ராசியில் பிறந்தவர். தனது இடையறாத தொழில் முனைவு பயணத்தில் பல்வேறு புதிய தொழில்களை தொடங்கி நடத்தும் நாட்டின் மிக முக்கிய தொழிலதிபராக அம்பானி விளங்குகிறார்.
நடிகர் சித்தார்த்
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக அறியப்படும் நடிகர் சித்தார்த் ஒரு மேஷ ராசிக்கரர் ஆவார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். உதவி இயக்குநராக வாழ்கையை தொடங்கிய இவர் கதாநாயகன் வரை உயர்ந்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா
தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் திரை உலகை கலக்கி வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா மேஷ ராசியில் பிறந்தவர். தனது நளினமான நடத்தாலும், சுண்டி இழுக்கும் நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
நடிகர் விக்ரம்
மேஷ ராசியில் பிறந்த விக்ரம் தமிழ்த் திரையுலகின் தனித்துவ நடிகராக உள்ளார். சேது தொடங்கி தற்போது நடித்து வரும் தங்கலான் வரை ஏற்கும் கதாப்பாத்திரத்தில் நடிக்காமல் அதில் வாழ்வதில் வல்லவராக உள்ளார்.
நடிகர் பிரபுதேவா
நடனப்புயல் பிரபுதேவா ஏப்ரல் 3ஆம் தேதி 1973 ஆண்டு கர்நாடகா மாநிலம் மைசூரில் பிறந்தார். தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக வாழ்கையை தொடங்கி நடிகராகவும் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகராக மட்டுமின்றி அரசியல் செயற்பாட்டாளராகவும் உள்ள பிரகாஷ் ராஜ் தென்னிந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக உள்ளார். மேஷ ராசியில் பிறந்த இவர் நடிப்பு மட்டுமின்றி தற்போது முற்போக்கு அரசியல் தளத்தில் இயங்கி வருகிறார்.
நடிகை கங்கனா ரணாவத்
இந்தி திரைப்படத்தின் முன்னணி நடிகையாக உள்ள கங்கனா ரணாவத் மேஷ ராசியில் பிறந்தவர். அவருடைய தொடக்க கால திரை வாழ்கை கடினமானதாக இருந்தாலும் பாலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக உள்ளார். மேலும் தற்போது அரசியல் துறையிலும் அவரது பார்வை உள்ளது.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி
சின்னத்திரை நடிகையாக இருந்து தற்போது மத்திய அமைச்சர் வரை உயர்ந்துள்ள ஸ்மிருதி இராணி மேஷ ராசியில் பிறந்தவர். சீரியல் நடிகையாக அவரது ஆரம்ப வாழ்கை இருந்த நிலையில் அவரது அரசியல் செயல்பாடுகளால் கவனிக்கப்படும் மத்திய அமைச்சராக உயர்ந்துள்ளார்.
நடிகர் ராம்சரண்
தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சிவியின் மகனான ராம்சரண் மேஷ ராசியில் பிறந்தவர். அவரின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலக அளவில் கவனிக்கப்படும் நடிகராக அவரை உயர்த்தி உள்ளது.
நடிகை ஷோபனா
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை ஷோபனா மேஷ ராசியில் பிறந்தவர். மலையாளத்தில் தொடங்கி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஜெயாபச்சன்
பிரபல பாலிவுட் நடிகையும் அரசியல்வாதியாகவும் உள்ள ஜெயபச்சன் மேஷ ராசியில் பிறந்தவர். 8 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ள இவருக்கு 1992ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ராணி முகர்ஜி
ராஜா கி ஆயேகி பாராத் என்கிற படத்தில் அறிமுகமாகிய ராணி முகர்ஜி மேஷ ராசியில் பிறந்தவர். சிறந்த நடிகைகான பிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளார்.
டாபிக்ஸ்