Revati Nakshatram: ‘பேசியே காரியம் சாதிக்கும் அதிபுத்திசாலிகள்!’ ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!
“எடுத்த காரியத்தை தள்ளிப்போடாமல் விரைவில் முடிக்கும் எண்ணம் இவர்களுக்கு இருக்கும். மேலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு”
அதிபுத்திசாலிகளான இவர்கள், சிறந்த பேச்சாளர்களாக விளங்குவர். இவர்களுக்கு வீரம், புகழ், சாதூர்யம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
ஒளிவீசும் கண்களை பெற்ற இவர்கள், பிறரை ஈர்ப்பதில் வல்லவர்கள். படித்தவர்களின் அதிகம் அன்பு செலுத்தக்கூடிய இவர்கள், தர்கரீதியாக விவாதம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தான தர்மம் செய்வதில் ஈடுபாடு கொண்ட ரேவதி நட்சத்திரக்காரர்கள், இதனால் மக்களுக்கு நன்கு பரிட்சயம் ஆகிவிடுவார்கள்.
எடுத்த காரியத்தை தள்ளிப்போடாமல் விரைவில் முடிக்கும் எண்ணம் இவர்களுக்கு இருக்கும். மேலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு.
ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகளாக விளங்குவார்கள்.
ரேவதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தங்களது புத்திசாலிதனத்தை காசாக்குவதில் வல்லவர்கள்.
ரேவதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாமே தனக்கு கொஞ்சம் வேண்டும், எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் இயற்கையிலேயே இருப்பார்கள். இதற்காக சிரத்தை எடுத்து இவர்கள் உழைப்பார்கள்.
ரேவதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் ஒரு விஷயத்தை அதிகம் ஆராய்ந்து சிக்கலை சந்திப்பார்கள். இவர்கள் வாழ்கையில் வெல்ல மிக கவனமாக இருப்பது அவசியம்.
தேவ கணம் பொருந்திய ரேவதி நட்சத்திரம் பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்திற்கு உரிய விளங்கு யானை, இந்த நட்சத்திற்கு உரிய விருட்சம் இலுப்பை மரம். இவர்களுக்கான பறவையாக வல்லூறு பறவை உள்ளது.
ரேவதி நட்சத்திற்கு உரிய பரிகார ஸ்தலமாக திருச்சி அருகே உள்ள காருகுடி கைலாசநாதர் ஆலயம் உள்ளது. இருந்தாலும் ரேவதி நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்தில் அருகே உள்ள சிவாலயத்தில் வழிபாடு நடத்தி வர சிறப்புகளை பெற முடியும்.
சனி பகவானே ரேவதி நட்சத்திரத்தில் பிறந்ததாக புராண வரலாறு கூறுகிறது. இவர்களுக்கு முதல் தசையாக புதன் மகாதசை வருகிறது.
கேது மகாதசை, கேது புத்தி, சூரிய மகாதசை, சூரிய புத்தி, செவ்வாய் மகாதசை, செவ்வாய் புத்தி, குரு மகாதசை, குரு புத்தி, சனி மகாதசை, சனி புத்தி வரும் காலங்கள் இவர்களுக்கு சாதகமானதாக இருக்கும். இவர்களின் லக்னத்திற்கும் இந்த கிரங்கள் பலமானதாக இருந்துவிடால் இன்னும் இரட்டிப்பான பலன்களை இவர்கள் பெறுவார்கள்.
இவர்களுக்கான வசிய நட்சத்திரமாக பரணி நட்சத்திரம் விளங்குகிறது. இவர்கள் வாழ்கையில் கணவன், மனைவியாக இணைந்தால் இருவருக்கும் பரஸ்பர அன்பு இருக்கும்.
அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்ரம், உத்ராடம், மிருகசீரிசம், சித்திரை, அவிட்டம், விசாகம், புனர்பூசம், பூரட்டாதி, அனுசம், பூசம், உத்ரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய செயல்களை செய்ய முற்பட்டால் சாதகமான பலன்களை ஏற்படுத்தி தரும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.