தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Avinashi Lingam Temple: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி; ஒருவர் கைது

Avinashi Lingam Temple: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி; ஒருவர் கைது

Pandeeswari Gurusamy HT Tamil
May 23, 2023 01:35 PM IST

கோவிலுக்குள் உள்ள இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்துள்ளது பார்த்த அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டிருந்தது.

சேதப்படுத்தப்பட்ட அவிநாசி லிங்கம் கோயில்
சேதப்படுத்தப்பட்ட அவிநாசி லிங்கம் கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் உள்ளது. இங்கு இன்று அதிகாலை நேரத்தில் கோவில் அர்ச்சகர்கள் நடை திறந்த பொழுது கோவிலில் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது. கோவிலுக்குள் உள்ள இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்துள்ளது பார்த்த அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைகள் மீது அணிவித்துள்ள துணிகள் மற்றும் அவிநாசிலிங்கேசுவரர் மீது இருந்த பொருட்கள் மற்றும் துணி களைந்துள்ளதை கண்ட அர்சகர்கள் உடனே கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையில் விசாரனை மேற்கொண்டு வந்தனர். இதில் முருகன் சன்னதியில் வெண்கலத்தால் செய்த வேல் மற்றும் சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் உபகாரப்பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் ஒருவன் ஒழிந்திருப்பது தெரிய வந்து போலீசார் அவனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவிநாசியை அடுத்து சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த சரவண பாரதி (32) என்பதும், இன்று அதிகாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவனிடமிருந்து வெண்கலத்தால் ஆன வேல், சேவல் கொடி வேல் மற்றும் உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கொள்ளை சம்பவம் குறித்து இந்து அமைப்பினர் கோயில் முன்பு கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொள்ளை முயற்சியால் இச்சம்பவத்தால் இன்று கோயிலில் கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை, பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வேதனையடைந்தனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்