தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Trigraha Yoga:மேஷ ராசியில் உருவாகிய திரிகிரக யோகம்.. 100 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அபூர்வம்..வெற்றி வாகை சூடும் ராசிகள்!

Trigraha Yoga:மேஷ ராசியில் உருவாகிய திரிகிரக யோகம்.. 100 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அபூர்வம்..வெற்றி வாகை சூடும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Apr 26, 2024 02:41 PM IST

Trigraha Yoga: மேஷ ராசியில் உருவாகிய திரிகிரக யோகத்தால் 100ஆண்டுகளுக்குப் பின் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மேஷம்
மேஷம்

அதன்படி, கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறும்போது சில ராசியினருக்கு நன்மையினையும் சில ராசியினருக்கு தீமையினையும் உண்டாக்குகின்றன.

இந்நிலையில் மேஷ ராசியில் குரு பகவான் பயணித்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி சூரிய பகவான் மேஷ ராசியிலும், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷ ராசியிலும் பயணிக்கத் தொடங்கினர். அதன்படி, மேஷ ராசியில், குரு, சூரியன், சுக்கிர பகவான் ஆகிய ராசிகள் ஒன்று சேர்ந்து திரிகிரகயோகத்தை உண்டு செய்கின்றன. இந்த திரிகிரக யோகம் என்பது சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின், மேஷ ராசியில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த யோகத்தில் அதிகளவில் அதிர்ஷ்டத்தைச் சம்பாதிக்கும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மேஷம்: இந்த திரிகிரக யோகமானது, மேஷ ராசியில் தோன்றியுள்ளது. மேஷ ராசியில் குரு, சூரியன், சுக்கிரன் ஆகிய மூன்று ராசிகள் ஒன்றுசேர்ந்துள்ளன. அதாவது மேஷ ராசியில் முதல் இல்லத்தில் இந்த அதிர்ஷ்ட யோகம் பிறப்பெடுத்துள்ளது. ஆகையால், தொழிலில் ஒரு வளர்ச்சியும் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த மேஷ ராசியினருக்கு, இக்காலத்தில் நன்மை கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அடிக்கடி உருவாகிய சண்டை சச்சரவுகள் நீங்கி, மனநிம்மதி உண்டாகும். பணத்தை வெளியில் கொடுத்து, வராமல் இருந்த கடன்கள் கைவசம் வந்துசேரும். இத்தனை நாட்களாகப் பணியிடத்தில் கிடைக்காத ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

கடகம்: இந்த ராசியின் 10ஆம் இல்லத்தில் திரிகிரக யோகம் உண்டாகியுள்ளது. இக்காலம் இந்த ராசியினருக்கு மிகவும் அருமையான காலகட்டம் ஆகும். வெகுநாட்களாக சுயதொழில் தொடங்கவேண்டும் என்ற மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த கடகராசியினருக்கு ஏற்ற காலம் ஆகும். குறிப்பாக, வேறு ஒரு வேலை செய்துகொண்டிருந்தாலும், இக்காலகட்டத்தில் நண்பர்களின் துணையோடு கூட்டாக சைடு பிசினஸாவது செய்வீர்கள். இதனால் உங்களது வருவாய் நேர்மையான முறையில் அதிகரிக்கும். மேலும் இதனைப் பத்திரமாக, வங்கியில் சேமிப்புக்கணக்கில் சேமிப்பீர்கள். பணியிடத்தில் போட்டியாளர்களால் இத்தனை நாட்களாக நீங்கள் பட்ட துன்பம் நீங்கி, சரியான அங்கீகாரம் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.

மிதுனம்: இந்த ராசியின் 11ஆம் இல்லத்தில் திரிகிரக யோகம் உண்டாகியிருக்கிறது. ஆகையால், இந்த ராசியினர் இந்த காலத்தில் பங்குச் சந்தை, தங்கத்தில் முதலீடு செய்யலாம். தொழில் முனைவோருக்கு சரியான முயற்சி எடுத்தால் அயல் நாட்டு நிறுவனங்களில் ஆர்டர்கள் கையெழுத்தாகும். விவசாயிகளுக்கு இக்காலகட்டத்தில் நிலத்தை உழலாம். வருங்காலத்தில் நல்ல மகசூல் கிடைக்கும். இத்தனை நாட்களாக உங்களது வாயினால் உருவாகிய சண்டை சச்சரவுகள் நீங்கி, நற்பெயர் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்