மேஷத்தில் சுத்தி சுத்தி புகுந்தார் சுக்கிரன்.. பண மழையில் சிக்கிய ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது.. நீங்க என்ன ராசி-let us see the signs that get raja yoga due to lord venus entering aries today - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷத்தில் சுத்தி சுத்தி புகுந்தார் சுக்கிரன்.. பண மழையில் சிக்கிய ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது.. நீங்க என்ன ராசி

மேஷத்தில் சுத்தி சுத்தி புகுந்தார் சுக்கிரன்.. பண மழையில் சிக்கிய ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது.. நீங்க என்ன ராசி

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 24, 2024 02:35 PM IST

Lord Venus: சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை இடமாறுகின்ற காரணத்தினால் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று அதாவது இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். அவர் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு செல்கிறார்.

சுக்கிரன்
சுக்கிரன்

சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை இடமாறுகின்ற காரணத்தினால் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று அதாவது இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். அவர் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு செல்கிறார்.

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

மேஷ ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் செல்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் காதல் திருமணங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கூட்டு வியாபாரத்தை தற்போது தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். உங்கள் ராசியில் 12-வது வீட்டிற்கு அவர் செல்கின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களால் உதவி கிடைக்கும் உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்களுக்கு அதிக செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்து வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் உங்களுக்கு முழுமையாக கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9