தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  World Cup 2023: இந்தியாவில் விளையாட சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான் - சென்னையில் அதிக போட்டிகள்

World Cup 2023: இந்தியாவில் விளையாட சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான் - சென்னையில் அதிக போட்டிகள்

May 11, 2023, 11:08 PM IST

  • இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்து வந்தது. இதையடுத்து ஆசிய கோப்பை தொடர் நடத்துவது தொடர்பாக பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இடையே சர்ச்சை நிகழ்ந்து வரும் நிலையில், உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகமே எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கபோவதில்லை என தெரிவித்தது. இதையடுத்து தற்போது இந்தியாவில் உலகக் கோப்பை தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி ஒப்புக்கொண்டதாக கூறப்படும் நிலையில், அகமதபாத் ஹைதராபாத், சென்னை, பெங்களூரு ஆகிய மைதானங்களில் அந்த அணி விளையாடும் போட்டி நடைபெறும் என தெரிகிறது. உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி இங்கிலாந்து - நியூசிலாந்து இடையே நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா விளையாடும் முதல் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2023 சீசன் முடிவடைந்த பிறகு உலகக் கோப்பை தொடரின் அட்டவணையை பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் பெரும்பாலும் சென்னையில் நடைபெறும் என தெரிகிறது. கொல்கத்தா, டெல்லி, இந்தூர், தரம்சாலா, குவாஹட்டி, ராஜ்கோட், ராய்பூர், மும்பை ஆகிய மைதானங்களில் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் என தெரிகிறது.