தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Japan Fans Lauded For Being Class Apart After Fifa Win Over Germany

viral video: கத்தார் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்!

Nov 24, 2022, 08:01 PM IST

22-வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், ஜப்பான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஜெர்மனி அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. உலக சாம்பியனான ஜெர்மனி அணியை ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் தட்டி தூக்கியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பரபரப்பான இந்த ஆட்டத்தை ஸ்டேடியத்தில் நேரில் பார்த்தவர்கள் மட்டுமல்லாமல், டிவியில் பார்த்து ரசித்த ஜப்பான் ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் கால்பந்து ரசிகர்களின் புருவத்தை உயர செய்த ஜப்பான் வீரர்கள் மட்டுமல்லாமல் அந்நாட்டு ரசிகர்களும் உலகின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்றுள்ளார்கள். ஜெர்மனி மற்றும் ஜப்பான் போட்டி முடிந்த பிறகு கலிஃபா சர்வதேச ஸ்டேடியம் காலியானது. ஆனால், தங்கள் நாட்டு அணி வெற்றி கொண்டாட்டத்தோடு ஜப்பான் ரசிகர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவில்லை. அங்கு கூடுதலாக நேரம் செலவிட்டு நீல நிற குப்பைப் பைகளை எடுத்துக்கொண்டு, மைதானத்தில் இருந்த காலி தண்ணீர் பாட்டில்கள், வீசப்பட்ட உணவு மற்றும் மற்ற குப்பைகளை பைகில் சேகரித்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டார்கள். ஜப்பான் ரசிகர்களின் இந்தச் செயல் சமூகவலைத்தளங்களில் வெகுவாக பாராட்டை பெற்றுள்ளது.