தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Indian Army: ஜெட் பேக் சூட்கள்! அயர்ன் மேன் ஆக மாறும் இந்திய ராணுவத்தினர்

Indian Army: ஜெட் பேக் சூட்கள்! அயர்ன் மேன் ஆக மாறும் இந்திய ராணுவத்தினர்

May 09, 2023, 11:16 PM IST

  • ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து உள்ள பகுதிகளில் ராணுவத்தினர் ஜெட் பேக் சூட்டுகள் அனைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. போர் நிகழ்வதற்கான சூழல் உள்ள நகர்புற, அதை ஒட்டிய பகுதிகளிலும், பாகிஸ்தான், சீனா எல்லை பகுதிகளிலும் உள்ள முக்கிய இடங்களில் முழு பாதுகாப்பு கவசத்துடன் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ராணுவ உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜனவரி மாதம் 48 ஜெட் பேக் யுனிட்கள் பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் ஆர்டர் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவத்துறை நவீனப்படுத்தும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுவதாக கூறப்படுகிறது. இந்த ஜெட் பேக் சூட் அணிந்தால் ராணுவ வீரர்கள் பார்ப்பதற்கு ஹாலிவுட் படமான அயர்ன் மேன் படத்தில் வரும் கதாபாத்திரம் போல் இருப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜெட் பேக் சூட்டில் பல்வேறு சிறிய பவர்புல்லான் ஜெட் எஞ்ஜின்கள் உடலில் இணைக்கப்பட்டிருக்கும். அவை 5 கேஸ் டர்பைன் எஞ்சின் பவரை கொண்டதாகவும், 1000க்கும் மேற்பட்ட குதிரை திறனும் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 80 கிலோ எடையுள்ள நபரை இது தாங்கும் சக்தியை கொண்டிருப்பதுடன், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் குறைந்தது நிமிடங்கள் வரை பறக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெட் பேக் 2021இல் முதல்முறையாக ஸ்லோவேனியாவில் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டது.