தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Fifa Wc 2022:அர்ஜென்டினாவிடம் வெற்றி!உச்சகட்ட கொண்டாட்டத்தில் செளதி அரேபியர்கள்

FIFA WC 2022:அர்ஜென்டினாவிடம் வெற்றி!உச்சகட்ட கொண்டாட்டத்தில் செளதி அரேபியர்கள்

Nov 23, 2022, 07:56 PM IST

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியனும், பலம் வாய்ந்த கால்பந்து அணியான அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்று ஷாக் கொடுத்தது செளதி அரேபியா கால்பந்து அணி. இந்த சர்ப்ரைஸ் வெற்றியை கொண்டாடும் விதமாக செளதி அரேபியா இளவரசர் ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்தார். அர்ஜென்டினா அணியை செளதி அரேபியா வீழ்த்திய அந்த தருணத்தை கண்டு கழித்த அந்த நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான், தன்னுடம் ஆட்டத்தை பார்த்தவர்களை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தப் புகைப்படங்களைஇளவரசரின் சகோதரர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கால்களை மடக்கி கீழ் விழுந்து கடவுளுக்கும் அவர் நன்றி சொல்லியுள்ளார். இந்த மாபெரும் வெற்றியை செளதி அரேபியா மக்கள் ஆட்டம், பாட்டம் என சிறப்பாக கொண்டாடியுள்ளனர். வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியாக இது அமைந்திருப்பதாகவும் பலரும் கூறி வருகின்றனர். இதுவரை உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் வென்றிடாத செளதி அரேபியா, முதல் முறையாக வெற்றி பெற்றிருப்பதோடு, பலம் வாய்ந்த அணியை வீழ்த்தியிருப்பதும் அந்நாட்டு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. கால்பந்து வரலாற்றில் இந்த போட்டி முடிவு மிகப் பெரிய அப்செட்டாக அமைந்துள்ளது.