தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  There Is No Dispute With Annamalai Amit Shah Told Eps After The Meeting

EPS Met Amit Shah: ’அண்ணாமலை உடன் எந்த தகராறும் இல்லை’ அமித்ஷா சந்திப்புக்கு பின் ஈபிஎஸ் பேட்டி

Kathiravan V HT Tamil

Apr 27, 2023, 09:54 AM IST

EPS Met Amit Shah: பிடிஆர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். இதனை பொருட்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது. அமித்ஷா அவர்களும் இந்த ஆடியோ செய்தியை பார்த்ததாக கூறினார் - ஈபிஎஸ்
EPS Met Amit Shah: பிடிஆர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். இதனை பொருட்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது. அமித்ஷா அவர்களும் இந்த ஆடியோ செய்தியை பார்த்ததாக கூறினார் - ஈபிஎஸ்

EPS Met Amit Shah: பிடிஆர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். இதனை பொருட்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது. அமித்ஷா அவர்களும் இந்த ஆடியோ செய்தியை பார்த்ததாக கூறினார் - ஈபிஎஸ்

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சந்தித்து பேசிய நிலையில், இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

ட்ரெண்டிங் செய்திகள்

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் உடன் மத்திய உள்துறை அமித்ஷாவை சந்தித்து பேசினோம். இது சம்பரதாயப்படி நடந்த சந்திப்புத்தான் இது என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

புதுடெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

கேள்வி:-அதிமுக-பாஜக கூட்டணி உறுதி ஆகிவிட்டதா?

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. ஏற்கெனவே 2029, 2021 தேர்தல்கள் மற்றும் ஈரோடு தேர்தலிலும் தொடர்ந்த கூட்டணி தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கேள்வி:- உங்களுக்கும் அண்ணாமலைக்கு கருத்து வேறுபாடு இருப்பது எல்லோருக்கும் தெரியும் அது குறித்து பேசப்பட்டதா?

நீங்கள் கேட்ட கேள்வி தவறானது. எங்களுக்கும் அண்ணாமலைக்கும் எந்தவிதமான தகராறும் கிடையாது. ஊடகங்கள் குளறுபடி செய்ய வேண்டும் என்பதற்கே கேள்வியை கேட்கின்றனர். ஊடகங்கள் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்றே ஊடகங்கள் கேள்விக்கேட்கின்றன.

எல்லோருமே அவரவர்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்றுதான் பார்ப்பார்கள். எங்கள் கூட்டணி கட்சியினர் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். திமுக கூட்டணி போல் அடிமைகள் கிடையாது.

கேள்வி:- அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் உங்களை பதிவேற்றம் செய்தார்களா? அல்லது அங்கீகரித்துள்ளார்களா?

தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் தெளிவான தீர்ப்பை வழங்கிவிட்டது. அதிமுக எங்கள் பக்கம்தான் உள்ளது.

கேள்வி:- ஓ.பன்னீர் செல்வம் திருச்சியில் மாநாடு நடத்தி உள்ளாரே?

அது குறித்து நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்

கேள்வி:- பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ குறித்து சந்திப்பில் விவாதிக்கப்பட்டதா?

பிடிஆர் ஆடியோ மிகப்பெரிய விஷயம், நிதி அமைச்சரே 30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக உதயநிதி, சபரீசன் ஆகியோர் பெயரை சொல்லி சொல்கிறார். இதனை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

பிடிஆர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். இதனை பொருட்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது. அமித்ஷா அவர்களும் இந்த ஆடியோ செய்தியை பார்த்ததாக கூறினார்.

கேள்வி:- அதிமுக ஆட்சியில் சிஏஜி அறிக்கையில் ஊழல் நடந்ததாக கூறி உள்ளார்களே?

சிஏஜி அறிக்கையில் எங்கே ஊழல் என்று சொல்லி உள்ளார்கள்?. நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது, நிதியை பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்லி உள்ளார்கள். திமுக ஆட்சியில் 28ஆயிரம் கோடி செலவு செய்யப்படவில்லை. கொரோனா காலத்தில் 2 ஆண்டுகளாக எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை.

2021-22 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 28 ஆயிரத்து 723 கோடி பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்டதை விட குறைவாக செலவு செய்துள்ளார்கள்.

கேள்வி:- 4 ஆண்டுகால ஆட்சியில் கொடநாடு வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கோராமல் தற்போது கேட்பது எப்படி நியாயம்?

கொடநாடு வழக்கு அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது நடந்தது, குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது அதிமுக அரசாங்கம்தான். கொரோனா காலத்தில் நீதிமன்றம் செயல்படவில்லை. வழக்கு முடியும் தருவாயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

நாங்கள் கைது செய்த குற்றவாளிகளை திமுகவினர் ஜாமீன் எடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே குற்றவாளிகளுக்காக ஆஜராகி ஜாமீன் பெற்றுத் தருகிறார். அப்படி பட்டவர்களுக்காக திமுகவினர் ஆஜராகி உள்ளார்.

இந்த வழக்கில் உண்மை தன்மை தெரிய வேண்டும் என்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

கேள்வி:- ஓபிஎஸ் மனம் மாறி அதிமுகவிற்கு வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா?

ஒரு சிலரை தவிர்த்து அதிமுக மீது நன்மதிப்பு வைத்துள்ள விஸ்வாசமிக்கவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிரச்னை. இதனை ஸ்டாலின் தலைமையில் உள்ள அமைச்சரவையில் உள்ள நிதியமைச்சர் சொல்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இன்னும் பதில் சொல்லவில்லை. இதில் சந்தேகம் ஏற்படுகிறது.