தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Special Trains: சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்; முன்பதிவு எப்போது?

Special Trains: சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்; முன்பதிவு எப்போது?

Karthikeyan S HT Tamil

Jan 22, 2023, 11:42 AM IST

சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு ஜனவரி 25 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Annamalai Case: ’எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு!’ ஆளுநர் மாளிகை மறுப்பு!

Weather Update: ‘தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கோடை மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Nagai MP Selvaraj Passed Away: நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

What is Goondas Act: ‘யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுக்கு எம்ஜிஆர் காரணமா?’ குண்டர் சட்டம் என்றால் என்ன?

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  • சென்னை, தாம்பரத்தில் இருந்து வரும் 25 ஆம் தேதி, நாகர்கோவிலுக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 06053) இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது, தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.
  • மறுமார்க்கமாக வரும் 29 ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலானது (வண்டி எண்: 06054) மறுநாள் 30 ஆம் தேதி, அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
  • இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி

  • சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமை (ஜன.26) இரவு 9 மணிக்கு நெல்லைக்குப் புறப்படும் சிறப்பு கட்டண ரயிலானது, மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்று அடையும்.
  • மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து 27 ஆம் தேதி பகல் 1 மணிக்குப் புறப்படும் ரயிலானது, மறுநாள் காலை 3.20 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.
  • இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் (ஞாயிறு) தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி