தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Schools Holiday: புயல் எதிரொலி; 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Schools Holiday: புயல் எதிரொலி; 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Karthikeyan S HT Tamil

Dec 08, 2022, 04:17 PM IST

Mandous Cyclone: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Mandous Cyclone: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Mandous Cyclone: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் நாளை (டிச.9) இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

10th Result: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% சதவீதம் தேர்ச்சி..மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!

Weather Update : மக்களே தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை மழை கொட்ட போகுது.. நாளை ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Fire Accident Near Sivakasi: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - 8 பேர் உயிரிழப்பு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

Today Gold Rate: நாளை அட்சய திருதியை .. இன்று தங்கம் விலை திடீர் குறைவு. . இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

எங்கெங்கு கனமழை, அதி கனமழை வாய்ப்பு?

கனமழை பொறுத்தவரையில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராம்நாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

நாளை (டிச.9) சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

10 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டாபிக்ஸ்