தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. வட தமிழகத்தில் வெயில் கொளுத்த போகுதாம்.. வானிலை மையம் எச்சரிக்கை!
Apr 23, 2024, 06:46 AM IST
Weather Update Today : தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
திற்பரப்பு (கன்னியாகுமரி) 4, தாளவாடி (ஈரோடு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2, சோலையார் (கோயம்புத்தூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 1.
அதிகபட்ச வெப்பநிலை :
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் பொதுவாக இயல்பை விட 3° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.2° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், சேலத்தில் 41.0° செல்சியஸ், வேலூரில் 40.8° செல்சியஸ், திருச்சியில் 40.6° செல்சியஸ், மதுரை விமானநிலையம் & திருப்பத்தூரில் 40.2° செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35° – 39° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 39° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 37.8° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
23.04.2024 முதல் 28.04.2024 வரை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
23.04.2024 முதல் 26.04.2024 வரை:
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்:
23.04.2024 முதல் 26.04.2024 வரை:
காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
டாபிக்ஸ்