Weather Update: ’வறண்ட வானிலை அதிகரிக்கும்! சென்னையில் மேக மூட்டம் அதிகரிக்கும்!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் இசை மாறுபடும் பகுதி நிலவுகிறது”

வானிலை நிலவரம்
கடந்த 24 மணி நேர வானிலை
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு 41.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையும், குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கல்லில் 21 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் மலைப்பகுதியான கொடைக்கானலில் 11.3 டிகிரி செல்ஷிஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.
இன்றைய வானிலை நிலவரம்
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் இசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.