தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Karnataka Assembly Elections 2023: Ops Supporter Pugahendi Meets Yeddyurappa Seeking Support To Contest Karnataka Elections

கர்நாடக தேர்தலில் களமிறங்கும் ஓபிஎஸ்! எடியூரப்பாவை சந்தித்த புகழேந்தி!

Kathiravan V HT Tamil

Apr 07, 2023, 12:26 PM IST

Karnataka Assembly Elections 2023: தமிழகத்தில் அவ்வுளவு இடம் கொடுக்கிறோம்; கர்நாடகாவில் ஏன் தரக்கூடாது என்ற எண்ணம்தான் - ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி
Karnataka Assembly Elections 2023: தமிழகத்தில் அவ்வுளவு இடம் கொடுக்கிறோம்; கர்நாடகாவில் ஏன் தரக்கூடாது என்ற எண்ணம்தான் - ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி

Karnataka Assembly Elections 2023: தமிழகத்தில் அவ்வுளவு இடம் கொடுக்கிறோம்; கர்நாடகாவில் ஏன் தரக்கூடாது என்ற எண்ணம்தான் - ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கர்நாடகாவில் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : என்னது மீண்டுமா.. தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து விற்பனை!

அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசுமாம்.. வானிலை மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி ஒன்பது!

'அஜித்துக்கும் எனக்கும் ஒரே Wavelength'..கலைஞர் இருக்கும் போதே தைரியம்..பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்த ஜெயக்குமார்!

இது தொடர்பாக பேசி உள்ள ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும் முன்னாள் கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி, எம்ஜிஆர் முதல் முதலாக கோலார் தங்கவயலில் வென்றோம். அதே இடத்தில் மூன்று இடங்களை வென்றுள்ளோம். பெங்களூருவில் வென்றோம். ஒரு நகரசபையை வென்றுள்ளோம். அந்த வரலாற்றில் எடியூரப்பாவுக்கு ஆதரவு கொடுத்து அவருக்காகவும் பணியாற்றி உள்ளோம்.

ஓபிஎஸ் ஆணைக்கு இணங்க பழைய நட்பிலே அவரை சந்தித்து தமிழர்கள் வாழும் பகுதியில் மீண்டும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மனு கொடுத்துள்ளோம். தமிழகத்தில் அவ்வுளவு இடம் கொடுக்கிறோம்; கர்நாடகாவில் ஏன் தரக்கூடாது என்ற எண்ணம்தான்.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடங்களை ஒதுக்குவதன் மூலம் அவர்களுக்கும் ஒரு லாபம்தானே.

ஓபிஎஸ் அணி என்றே எங்களை சொல்ல வேண்டாம். இப்போது வந்த தீர்ப்பில் ஒருங்கிணைப்பாளர் என்ன ஆனார் என்பதை நீதிபதி சொல்லவே இல்லை. எங்கேயும் பொதுச்செயலாளர் என்பதும் தெளிவுப்படுத்தவில்லை.

அதிமுகவின் ஓபிஎஸ்தான் கழகம்; கழகம்தான் ஓபிஎஸ். அதிமுக அவர் கையில் உள்ளது போல் பழனிசாமி மிகைப்படுத்தி காட்டுகிறார்.

கர்நாடகாவை பொறுத்தவரை பல்வேறு போராட்டங்களை அதிமுக சார்பில் நடத்தியவன் நான். எங்கள் கோரிக்கைகளை எடியூரப்பாவிடம் வலியுறுத்தி உள்ளோம் முடிவை எடியூரப்பாதான் எடுப்பார். ஓபிஎஸ்