தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எம்எல்ஏவாக ஈ.வி.கே.எஸ். பதவியேற்பு! காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை உயர்வு

எம்எல்ஏவாக ஈ.வி.கே.எஸ். பதவியேற்பு! காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை உயர்வு

Manigandan K T HT Tamil

Mar 10, 2023, 12:24 PM IST

Congress MLA Elangovan:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று சட்டமன்ற உறு்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
Congress MLA Elangovan:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று சட்டமன்ற உறு்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

Congress MLA Elangovan:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று சட்டமன்ற உறு்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில், எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

ட்ரெண்டிங் செய்திகள்

HBD EPS: ’கிளைக்கழக செயலாளர் முதல் அதிமுக பொதுச்செயலாளர் வரை!’ முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை!

Felix Jerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது! திமுக ஆட்டம் 2 வருஷம்தான்!’ கொதிக்கும் சீமான்!

Weather Update: ’மக்களே உஷார்! தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Gold Rate Today: குட் நியூஸ் மக்களே.. தங்கம் விலை சரிவு..சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை.. இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று சட்டமன்ற உறு்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடந்து முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்ட மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 02ம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்று காலை எம்.எல்.ஏவாக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி