தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Covai Airport: இந்திய தேசிய கீதம் பாட தெரியாமல் வசமாக சிக்கியவர் யார் தெரியுமா?

Covai Airport: இந்திய தேசிய கீதம் பாட தெரியாமல் வசமாக சிக்கியவர் யார் தெரியுமா?

Jan 24, 2023, 12:55 PM IST

போலி ஆணவங்கள் மூலம் கோவை வந்த பயணி தேசிய கீதம் பாட தெரியாமல் விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலி ஆணவங்கள் மூலம் கோவை வந்த பயணி தேசிய கீதம் பாட தெரியாமல் விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலி ஆணவங்கள் மூலம் கோவை வந்த பயணி தேசிய கீதம் பாட தெரியாமல் விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை விமான நிலையத்தில் இந்திய தேசிய கீதம் பாடத் தெரியாமல் போலி ஆவணங்களை தயாரித்தவர் வசமாக சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : அட்சய திருதி அன்று தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

10th Result: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% சதவீதம் தேர்ச்சி..மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!

Weather Update : மக்களே தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை மழை கொட்ட போகுது.. நாளை ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Fire Accident Near Sivakasi: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - 8 பேர் உயிரிழப்பு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

கோவை விமான நிலையத்திற்கு நேற்று காலை சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் வழக்கமான பரிசோதனைகளை இமிகிரேஷன் அதிகாரிகள் நடத்தி வந்தனர். அப்போது அதில் கொல்கத்தா முகவரியுடன் கூடிய பாஸ்போர்ட்டில் வந்த அன்வர் உசேன் என்பவர் மீது கோவை விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதனையடுத்து  அன்வர் உசேனிடம் இமிகிரேஷன் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்த தொடங்கினர். அப்போது அன்வர் உசேனை இந்திய தேசிய கீதம் பாடல் பாடிக் காட்டும்படி அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அன்வர் உசேனால் தேசிய கீதம் பாட முடியவில்லை.

இதைத்தொடர்ந்து மேலும் சந்தேகம் அடைந்த இமிகிரேஷன் அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தினர். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அன்வர் பங்களாதேஷ்சை சேர்ந்தவர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. போலியான ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்றிருப்பதும் தெரிய வந்தது. கடந்த 2018 முதல் 2020ம் ஆண்டு வரை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பனியன் நிறுவனத்தில் டைலராக அன்வர் உசேன் பணியாற்றி உள்ளார். பின்னர் பெங்களுரில் உள்ள ஏஜென்ஸி முலம் போலியான ஆதார் கார்டை தயாரித்து கொல்கத்தா முகவரியை காட்டி அங்கு பாஸ்போர்ட் வாங்கி இருப்பதும் அதிகாரிகளின் தொடர் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பாஸ்போர்டை பயன்படுத்தி அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று டைலர் வேலை பார்த்த நிலையில் இந்திய மதிப்பில் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் கிடைத்துள்ளது. திருப்பூரிலும் இதே ஊதியமே கிடைத்துள்ளது. இதனால் எதற்கு அரபு நாட்டில் கஷ்டப்பட வேண்டும் என எண்ணிய அன்வர் உசேன் மீண்டும் திருப்பூருக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். நேற்று ஏர் அரேபியா விமானம்  மூலம் கோவை வந்தடைந்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கல்கத்தா விமான நிலையம் செல்லாமல் கோவை விமான நிலையம் வந்ததால் சந்தேகம் அடைந்த இமிகிரேசன் அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அன்வர் உசேன் போலியாக ஆவணங்களை தயாரித்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கோவை விமான நிலைய இமிகிரேசன் அதிகாரி கிருஷ்ணன் ஸ்ரீ , பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து பீளமேடு காவல் துறையினர்அன்வர் உசேனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இன்றைய தேதியில் பொதுமக்களின் தனிப்பட்ட ஆவணங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதுமாக கருதப்படும் ஆதார் அட்டையை வைத்தே போலியாக ஆவணங்கள் தயாரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாபிக்ஸ்