தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chief Minister Stalin Congratulated Vck Leader Thirumavalavan On His Birthday

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர்!

Divya Sekar HT Tamil

Aug 17, 2022, 10:07 AM IST

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று தனது 60ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். திருமாவளவனின் பிறந்த நாளை ஒட்டி நேற்று மணி விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather update: சுட்டெரிக்கும் வெயில் .. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை

Today Gold Rate : என்னது மீண்டுமா.. தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து விற்பனை!

அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசுமாம்.. வானிலை மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி ஒன்பது!

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “திருமாவளவனின் 50 வயதில் கலைஞர் வாழ்த்தினார். இன்று 60 வயதில் நான் வாழ்த்துகிறேன். திருமாவளவனுக்கு இன்னும் பல கடமைகள் உள்ளதால் அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் . சட்டக் கல்லூரி மாணவராக திமுகவில் சிறப்பாக செயல்பட்டார் .

 அன்று திமுகவிலிருந்து செயல்பட்டார் ; இன்று கூட்டணிக்குள் இருந்து செயல்படுகிறார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் வேண்டாம் . இது தேர்தல் நடப்பு அல்ல; கொள்கை கூட்டணி. வெற்றிக்குப் பிறகும் ஒரு தாய் பிள்ளையாக இருக்கிறோம்”என்றார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், "மணிவிழா காணும் அன்புச் சகோதரர் 'எழுச்சித் தமிழர்' திருமாவளவன் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

டாபிக்ஸ்