தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Pongal 2023 : போலீசார் அதிரடி.. மதுபோதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் மீது வழக்கு!

Pongal 2023 : போலீசார் அதிரடி.. மதுபோதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் மீது வழக்கு!

Divya Sekar HT Tamil

Jan 17, 2023, 09:31 AM IST

பொங்கல் பண்டிகையன்று மதுபோதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பொங்கல் பண்டிகையன்று மதுபோதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

பொங்கல் பண்டிகையன்று மதுபோதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் பொங்கல் பண்டிகை அன்று 190 இடங்களில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். இதில் 5 ஆயிரத்து 904 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’கோடையில் குளுகுளு! தமிழ்நாட்டில் இன்று வெளுத்து வாங்க போகும் மழை!’ 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

EPS Birthday: எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!

Weather Update: 'மிரட்ட காத்திருக்கும் கனமழை..'தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்!

HBD EPS: ’கிளைக்கழக செயலாளர் முதல் அதிமுக பொதுச்செயலாளர் வரை!’ முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை!

'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர்கள், அதிவேகமாக வாகனத்தில் சென்றவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 359 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்தனர்.

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

போலீசார் நேற்று முன் தினம் (ஜன 15) இரவு 5,904 வாகனங்களை சோதனை செய்தது. இதில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய (Drunken Drive) குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் மீது 376 வழக்குப் பதிவு செய்து, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தல் (Without Helmet),

வாகனங்களும் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தல் (Triples Ride), இருசக்கர வாகனத்தை அதிவேகமாக அபாயகரமாக ஓட்டுதல் (Over Speed & Dangerous Drive) போன்ற இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 359 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 536 வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

முன்னதாக, சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து வாகனங்களை ஓட்டுமாறும் மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ரேஸ் போன்ற பந்தயங்களில் ஈடுபட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், பண்டிகை நாட்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினரால் தொடர்ந்து வாகன தணிக்கைகள் மேற்கொண்டு, போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவர்கள் மீதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர காவல்துறை கடுமையாக எச்சரித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி