தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Attention Students! Get Your Score Certificates From Today!

TN 12th Results 2023 : மாணவர்கள் கவனிக்க! இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறலாம்!

Priyadarshini R HT Tamil

May 12, 2023, 07:43 AM IST

மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதாவது இருந்தால் அதன் விவரங்களை இயக்குனராகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதாவது இருந்தால் அதன் விவரங்களை இயக்குனராகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதாவது இருந்தால் அதன் விவரங்களை இயக்குனராகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந் 8ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்காக கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் கூட்டம் மொய்க்க துவங்கிவிட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கல்லூரி படிப்பில் சேர்வதற்கு சில ஆவணங்கள் முக்கியமான தேவையாக உள்ளன. அதில் முக்கியமாக 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவை. அதற்காக ஒரிஜினல் சான்றிதழை உடனடியாக வழங்க முடியாது. அதற்காக அரசு முதற்கட்டாமக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பள்ளி தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது -

12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன் பின்னர் மதிப்பெண் பட்டியலில் உள்ள தகவல்களை சரிபார்த்து கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் அவற்றை பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதாவது இருந்தால் அதன் விவரங்களை இயக்குனராகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு அதன் பிறகு வழங்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டு அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் துவங்கி, மாணவர்களும் அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் கால அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து கல்லூரிகளில் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்களும் ஆர்முடன் விண்ணப்பித்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்