தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. தமிழ்நாடு எங்கே போகிறது? - அன்புமணி!

மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. தமிழ்நாடு எங்கே போகிறது? - அன்புமணி!

Divya Sekar HT Tamil

Jan 28, 2023, 12:08 PM IST

Tasmac Collection Appreciation : டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Tasmac Collection Appreciation : டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tasmac Collection Appreciation : டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: ஒரே நாளில் சட்டென குறைந்த தங்கம் விலை..சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா? - இன்றைய நிலவரம் இதோ!

TNEB Bill: விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் EB பில் வந்த விவகாரம்.. '8' போட்டு வேட்டு வைத்தது அம்பலம்!

Tiruvannamalai: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா?- மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

Weather Update: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. அப்போது டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாயிடும் பணியை சிறப்பாக மேற்கொண்டதாக கூறி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மேற்பார்வையாளர் விற்பனையாளர் என நான்கு பேருக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து மாவட்ட மேலாளர், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்கள் மீண்டும் திரும்ப பெறப்பட்டன.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”கரூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மது விற்பனை செய்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் தேடித் தந்ததற்காக அதன் பணியாளர்கள் 4 பேருக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தததையடுத்து திரும்பப் பெற்றுள்ளது.

குடியரசு நாள் என்ற புனித நாளில், பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் கடைபிடித்துள்ள அளவீடு அதிர்ச்சியளிக்கிறது. எதிர்ப்பு எழாமல் இருந்திருந்தால் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் கலாச்சாரம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நீட்டிக்கப்பட்டிருக்கக்கூடும்!

குடியரசு நாளில் ஒருபுறம் சென்னையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் விருதை முதலமைச்சர் வழங்குகிறார்; மறுபுறம் மதுவிற்றவர்களுக்கு கரூர் ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். இது என்ன முரண்பாடு? தமிழ்நாடு எங்கே போகிறது?

டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இத்தகைய பாவங்களுக்கு பரிகாரம் தேடவும், மக்களைக் காக்கவும் தமிழ்நாட்டில் மது விலக்கை நடைமுறைப்படுத்துவதாக அரசு அறிவிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி