தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nlc : முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளியுங்கள் - அன்புமணி வேண்டுகோள்!

NLC : முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளியுங்கள் - அன்புமணி வேண்டுகோள்!

Divya Sekar HT Tamil

Mar 10, 2023, 02:17 PM IST

நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து நாளை நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து நாளை நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து நாளை நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கடலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் நாளை மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Fire Accident Near Sivakasi: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - 8 பேர் உயிரிழப்பு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

Today Gold Rate: நாளை அட்சய திருதியை .. இன்று தங்கம் விலை திடீர் குறைவு. . இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

Rain : மக்களே எச்சரிக்கை.. இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்.. அடுத்த 5 நாட்கள் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

Captain Vijayakanth: ’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்ட உழவர்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தையும், அதற்கு துணையாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கடலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் நாளை (சனிக்கிழமை) கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

இது என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல. அடுத்து வரும் ஆண்டுகளில் பொது மக்களின் வீடுகள், நிலங்கள் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நடத்தப்படும் போராட்டம் தான் இதுவாகும்.

எனவே, நாளைய முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அது தான் அப்பாவி உழவர்களின் விளைநிலங்களை அடக்குமுறையை ஏவி பறிக்கும் என்.எல்.சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு முடிவு கட்டும்.

அதற்காக நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் மருத்துவம், பால் உள்ளிட்ட இன்றியமையாத் தேவைகளுக்கும், 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை போராட்டக்குழு உறுதி செய்யும்"எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்