தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  A Heated Debate Between The Chief Minister-ops-eps In The Legislative Assembly Regarding The Attack On The Aiadmk Office

அதிமுக அலுவலகம் தாக்குதல்! முதலமைச்சர்-ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே காரசார விவாதம்

Kathiravan V HT Tamil

Apr 20, 2023, 02:33 PM IST

திமுகவில் பிரச்னைகள் ஏற்பட்டபோது நாங்கள் அடித்துக் கொள்ளவில்லை; ரகளையிலும் ஈடுபடவில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதிலடி
திமுகவில் பிரச்னைகள் ஏற்பட்டபோது நாங்கள் அடித்துக் கொள்ளவில்லை; ரகளையிலும் ஈடுபடவில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதிலடி

திமுகவில் பிரச்னைகள் ஏற்பட்டபோது நாங்கள் அடித்துக் கொள்ளவில்லை; ரகளையிலும் ஈடுபடவில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதிலடி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : என்னது மீண்டுமா.. தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து விற்பனை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி ஒன்பது!

'அஜித்துக்கும் எனக்கும் ஒரே Wavelength'..கலைஞர் இருக்கும் போதே தைரியம்..பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்த ஜெயக்குமார்!

Weather Update: மக்களே உஷார்.. இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்…வானிலை மையம் எச்சரிக்கை!

காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது இதனை காவல்துறை தடுக்க தவறிவிட்டது.

அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவம் உட்கட்சி விவகாரம். தேவையான பாதுகாப்பை கட்சி அலுவலகத்திற்கு வெளியே காவல்துறை கொடுத்தாக கூறினார்.

திமுக இரண்டாக உடைந்த போது அக்கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளித்தது அதிமுக அரசு என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், திமுகவில் பிரச்னைகள் ஏற்பட்டபோது நாங்கள் அடித்துக் கொள்ளவில்லை; ரகளையிலும் ஈடுபடவில்லை என்று பேசினார்.

இந்த விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அன்று நடந்தது விரும்பத் தகாத சம்பவம் என்று, எங்கள் தரப்பு நிராயுதபாணியாக நின்றோம் என்றும் கூறினார். காவல்துறை விசாரித்து யார் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டார்கள் என்பதை தமிழ்நாடு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

யார் அலுவலகத்தை தாக்கினார்கள்? என்பது சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது யார் அலுவலகத்தில் இருந்து பொருட்களை திருடி சென்றார்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

டாபிக்ஸ்