தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wpl 2023: தோல்வியுடன் முதல் ஐபிஎல் பயனத்தை முடித்த ஆர்சிபி மகளிர் அணி

WPL 2023: தோல்வியுடன் முதல் ஐபிஎல் பயனத்தை முடித்த ஆர்சிபி மகளிர் அணி

Mar 21, 2023, 08:48 PM IST

தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற ஆர்சிபி அணி, கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையுடன் தோல்வியை தழுவியது முதல் ஐபிஎல் தொடரின் பயணத்தை முடித்துள்ளது. (AFP)
தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற ஆர்சிபி அணி, கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையுடன் தோல்வியை தழுவியது முதல் ஐபிஎல் தொடரின் பயணத்தை முடித்துள்ளது.

தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற ஆர்சிபி அணி, கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையுடன் தோல்வியை தழுவியது முதல் ஐபிஎல் தொடரின் பயணத்தை முடித்துள்ளது.

மகளிர் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் டிஒய் பாட்டீஸ் மைதானத்தில் முதலில் நடைபெற்ற ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

இந்த போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த மும்பை அணி, ஆர்சிபி அணியை 20 ஓவரில் 9 விக்கெட்டை வீழத்தி 125 ரன்களில் கட்டுப்படுத்தியது. இதைத்தொடர்ந்து மிகவும் எளிதான இலக்கை விரட்டிய மும்பை அணி ஹேலி மேத்யூஸ் - யாஸ்திகா பாட்யா ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர்.

பவர் ப்ளே முடிவதற்குள்ளாகவே முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்த நிலையில், பாட்யா 30 ரன்னில் அவுட்டானார். இதன் பின்னர் மேத்யூஸ் 24 ரன்னில் அவுட்டாக, அடுத்தடுத்து நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 13, ஹர்மன்ப்ரீத் கெளர் 2 ரன்களுடன் வெளியேறினார்.

இதனால் 73 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது. இதைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த அமெலியா கெர், பூஜா வஸ்த்ராகர் ஆகியோர் விக்கெட் சரிவை தடுத்து ரன்குவிப்பில் ஈடுபட தொடங்கினர்.

வஸ்த்ராகர் 19 ரன்னில் அவுட்டானபோதிலும், நிலைத்து நின்று பேட் செய்து வந்த அமெலியா கெர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தார். 16.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்தபோதிலும் 129 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது.

மந்தனா, சோபி டெவின், எலிசா பெர்ரி, ரிச்சா கோஷ் என ஏராளமான நட்சத்திர வீராங்கனைகள் இடம்பெற்று இருந்தாலும் மகளிர் ஐபிஎல் முதல் சீசனில் ப்ளே ஆஃப் கூட தகுதி பெற முடியாமல் தோல்விகரமான அணியாக மாறியுள்ளது ஆர்சிபி.

முதலில் விளையாடிய 5 போட்டிகளில் தோல்வியுற்றபோதிலும், பின்னர் அடுத்தடுத்து அதிரடியாக இரண்டு போட்டிகளை வென்ற ஆர்சிபி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மீண்டும் தோல்வியை தழுவியது.

புள்ளிப்பட்டியலில் ஆரம்பத்தில் இருந்து கடைசி இடத்தை பிடித்து வந்த ஆர்சிபி, தொடரின் முடிவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

டாபிக்ஸ்