தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Test Century: Wi அணிக்காக டெஸ்ட்டில் சதம் விளாசிய தந்தை-மகன்.. அரிய சாதனை!

Test Century: WI அணிக்காக டெஸ்ட்டில் சதம் விளாசிய தந்தை-மகன்.. அரிய சாதனை!

Manigandan K T HT Tamil

Feb 06, 2023, 11:34 AM IST

West indies vs Zimbabwe: இருவருமே கடந்த 2 நாட்களாக சிறப்பாக விளையாடி சதம் பதிவு செய்தனர். பிராத்வைட் 246 பந்துகளில் 116 ரன்களையும், டி.சந்திரபால் 291 பந்துகளில் 101 ரன்களையும் எடுத்துள்ளார். (AP)
West indies vs Zimbabwe: இருவருமே கடந்த 2 நாட்களாக சிறப்பாக விளையாடி சதம் பதிவு செய்தனர். பிராத்வைட் 246 பந்துகளில் 116 ரன்களையும், டி.சந்திரபால் 291 பந்துகளில் 101 ரன்களையும் எடுத்துள்ளார்.

West indies vs Zimbabwe: இருவருமே கடந்த 2 நாட்களாக சிறப்பாக விளையாடி சதம் பதிவு செய்தனர். பிராத்வைட் 246 பந்துகளில் 116 ரன்களையும், டி.சந்திரபால் 291 பந்துகளில் 101 ரன்களையும் எடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஜிம்பாப்வேயில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Olympic: ‘நாங்கள் நேரத்தை மேம்படுத்த வேண்டும்’: இந்திய ஆண்கள் 4x400 மீட்டர் ரிலே குழு பிளேயர் ராஜீவ் ஆரோக்கியா

Federation Cup 2024: ஃபெடரேஷன் கோப்பை 2024 போட்டியில் ஈட்டி எறிதல் வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா பங்கேற்பு

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

முதல் டெஸ்ட் ஆட்டம் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வைட், டி.சந்திரபால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவருமே கடந்த 2 நாட்களாக சிறப்பாக விளையாடி சதம் பதிவு செய்தார். பிராத்வைட் 246 பந்துகளில் 116 ரன்களையும், டி.சந்திரபால் 291 பந்துகளில் 101 ரன்களையும் எடுத்துள்ளார்.

மொத்தம் 89 ஓவர்களில் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 221 ரன்களை குவித்துள்ளது.

81.1 ஆவது ஓவரில் பிராத்வைட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12வது சதத்தை பதிவு செய்தார். 88ஆவது ஓவரில் டி.சந்திரபால் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

இதன் மூலம் புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இவரது தந்தை ஷிவ் நரேன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரராவார். தந்தை-மகன் இருவருமே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கா டெஸ்ட் போட்டிகளில் சதம் பதிவு செய்துள்ளனர். இந்தப் பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர். ஷிவ் நரேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்களை பதிவு செய்துள்ளார்.

மொத்தம் 164 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 11,867 ரன்களை அவர் குவித்துள்ளார்.

தாய்நாட்டுக்கு தந்தை-மகன் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய பட்டியலில் இந்திய வீரர்களும் உள்ளனர்.

ஷிவ்நரேன் சந்திரபால்

லாலா அமர்நாத்-அவரது மகன் மோஹிந்தர் அமர்நாத், விஜய்-அவரது மகன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ள பிற வீரர்கள் ஆவர்.

இஃப்திகர்-மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்துள்ள தந்தை-மகன் ஆவர்.

இஃப்திகர் இங்கிலாந்துக்காகவும், மன்சூர் அலி கான் இந்தியாவுக்காகவும் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்