தமிழ் செய்திகள்  /  Sports  /  Ipl New Rules Are Set To Be Introduce In Tnpl Cricket Which Going To Start From June 12

TNPL 2023: ஐபிஎல் போன்று சர்வதேச தரத்துக்கு உருமாறும் டிஎன்பிஎல் - 8 அணிகள், 4 மைதானங்களில் போட்டிகள்

May 30, 2023, 06:21 PM IST

ஐபிஎல் பாணியில் புதிய விதிமுறைகளுடன் சர்வதேச தரத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசன் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடர் தொடங்கும் தேதி மற்றும் மைதானங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் பாணியில் புதிய விதிமுறைகளுடன் சர்வதேச தரத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசன் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடர் தொடங்கும் தேதி மற்றும் மைதானங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் பாணியில் புதிய விதிமுறைகளுடன் சர்வதேச தரத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசன் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடர் தொடங்கும் தேதி மற்றும் மைதானங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போன்று தமிழ்நாட்டில் மூளை முடுக்குகளில் உள்ள திறமை வாய்ந்த இளைஞர்களை கண்டறியும் விதமாக ஆண்டுதோறும் டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள், ஜூன் 12 தொடங்கி, ஜூலை 12 வரை நடைபெறுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

Archer Deepika Kumari: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக்கிற்கான TOPS திட்டத்தில் மீண்டும் சேர்ப்பு

இந்தப் போட்டிகள் கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 32 நாள்கள் நடைபெறும் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

தமிழ்நாடு அளவில் நடைபெறும் இந்த போட்டிகள் லைவ் ஒளிபரப்பு உள்பட ஐபிஎல் போன்ற நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த முறை நடைபெற இருக்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் 7வது சீசனில், ஐபிஎல் போன்றே இம்பேக்ட் வீரர், டிஆர்எஸ், ரிசர்வ் நாள் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படவுள்ளன.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் ஆர்என் பாபா கூறியதாவது:

டிஎன்பிஎல் 7வது சீசனில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உட்பட எட்டு அணிகள் இந்த சீசனில் பங்கேற்கின்றன. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி இந்த ஆண்டு பாலிசி திருச்சி அணி என்ற பெயருடன் போட்டிகளில் பங்கேற்கிறது.

கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறும். இந்த சீசனின் இறுதிப்போட்டி நெல்லையில் நடைபெறுகிறது.

சென்னையில் இறுதிப்போட்டியில் நடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டது. ஆனால் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பணிகள் ஐபிஎல் போட்டிகள் நிறைவு பெற்ற பின் தொடங்க உள்ளதால் நெல்லையில் இந்த ஆண்டு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு அடுத்தபடியாக பெரும் எதிர்பார்ப்பு உள்ள போட்டியாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் உள்ளது. கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிகளை போல் இம்பேக்ட் பிளேயர், ரிசர்வ் பிளேயர், போன்றவை அறிமுகம் செய்யப்படுகிறது .ரிசர்வ் டே வழிமுறையும் இந்த ஆண்டு முதல் கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் டிஆர்எஸ் நடைமுறையும் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த முறை டிஜிட்டல் தளத்திலும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்்த விளையாட்டு போட்டிகளை காண டிக்கெட் விலை ரூ. 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் அதிகமான டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விரைவில் இந்த போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவுற்ற நிலையில், இன்னும் ஒரு மாத காலத்துக்கு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாபிக்ஸ்