தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Aus Win 1st Test: அசுர வெற்றி பெற்ற ஆஸி: நொந்து போன விண்டீஸ்!

AUS Win 1st Test: அசுர வெற்றி பெற்ற ஆஸி: நொந்து போன விண்டீஸ்!

Dec 04, 2022, 12:35 PM IST

164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முலாவது டெஸ்ட் போட்டி , நவம்பர் 30ம் தேதி தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, அபாரமாக ஆடி ரன்களை குவித்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL Final 2024: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

அந்த அணியின் மார்னஸ் லாபுசாக்னே 204 ரன்கள் எடுத்து இரட்டை சதம் அடித்தார். மற்றொரு வீரரான ஸ்டீவ் ஸ்மித்தும் 200 ரன்கள் எடுத்து இரட்டை சதம் அடித்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் இருவர் இரட்டை சதம் அடிக்க அந்த அணி இமாலய ஸ்கோரை எட்டியது.

அதன் பின் வந்த ட்ராவிஸ் ஹெட் தன் பங்கிற்கு 99 ரன்கள் எடுக்க, 152.4 ஓவரில், 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 598 ரன்கள் எடுத்தது.

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி, துவக்க வீரர்கள் கிராக் ஃபெர்த்வெட் மற்றும் டெக்னரேன் சந்தர்பால் ஆகியோர் மட்டும் அரை சதம் அடிக்க, மற்றவர்கள் பெரிய அளவில் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. இதனால், 98.2 ஓவரில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி, 283 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸி., அணி வீரர்கள் மகிழ்ச்சியில்

அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆஸி., அணி, அதிரடியாக ஆடியது. முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த மார்னஸ் லாபுசாக்னே, இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்கள் எடுத்து மீண்டும் சதம் அடித்தார். மற்ற வீர்கள் தங்கள் பங்களிப்பை தர, 37 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 182 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

ஏற்கனவே பின்தங்கி இருந்த வெஸ்ட் இண்டீஸ், இமாலய இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கிராக் ஃபெர்த்வெட், 110 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். மற்றொரு துவக்க வீரரான டெக்னரேன் சந்தர்பால் 45 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் சேகரிக்க தவறினார். இதனால், 110.5ஓவரில் 333 ரன்கள் மட்டுமே எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தோல்வி அடைந்தது.

164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

டாபிக்ஸ்