தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Slvsafg 1st Odi: ஒரு சதம்… இரண்டு அரை சதம்… இலங்கையை நொறுக்கிய ஆப்கானிஸ்தான்!

SLvsAFG 1st ODI: ஒரு சதம்… இரண்டு அரை சதம்… இலங்கையை நொறுக்கிய ஆப்கானிஸ்தான்!

Nov 25, 2022, 08:36 PM IST

ஒருவேளை இலங்கை வெற்றி பெற்றால், அது போராடி பெற்ற வெற்றியாகவே இருக்கும். அதுவே தோல்வியடையும் பட்சத்தில், அது ஆப்கானின் அபார வெற்றியாக இருக்கும். (ICC Twitter)
ஒருவேளை இலங்கை வெற்றி பெற்றால், அது போராடி பெற்ற வெற்றியாகவே இருக்கும். அதுவே தோல்வியடையும் பட்சத்தில், அது ஆப்கானின் அபார வெற்றியாக இருக்கும்.

ஒருவேளை இலங்கை வெற்றி பெற்றால், அது போராடி பெற்ற வெற்றியாகவே இருக்கும். அதுவே தோல்வியடையும் பட்சத்தில், அது ஆப்கானின் அபார வெற்றியாக இருக்கும்.

‘கத்துக்குட்டி’ அணிகள் என்று அழைக்கப்படும் சில அணிகள், திடீரென அதிரடி காட்டும் போது, அவர்களை பார்க்கும் விதமே அபரிவிதமானது. அந்த வகையில் தான், நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில், பல கத்துக்குட்டி அணிகள், தங்களுக்கு எதிராக களமிறங்கிய ஜாம்பவான் அணிகள் பலவற்றை தோற்கடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அதில் ஒரு அணி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

உலககோப்பைக்குப் பின், இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, அந்த அணியுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆப்கானிஸ்தான். 

அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர்களான குர்ஃபாஸ் மற்றும் ஜட்ரான் ஆகியோர் அதிரடியாக ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் , சொந்த மண்ணில் திணறிப் போயினர் இலங்கை பவுளர்கள். 

55 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த குர்ஃபாஸ், ஹசரங்கா பந்தில் ஆட்டமிழந்தார்.  ஆனாலும் மறுமுனையில் ஆடிய ஜட்ரான், தொடர்ந்து அதிரடி காட்டினார். அவருடன் இணைந்த ஷா, தனது பங்கிற்கு அதிரடி காட்ட, ஆப்கான் ரன்வேட்டை தொடர்ந்து கொண்டிருந்தது. 

நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடிய ஜாட்ரான், 120 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து, தக்‌ஷனா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அவருடன் ஆடிய ஷா, 64 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன் பின் ஜோடி சேர்ந்த  என்.ஜார்டன் 25 பந்தில் 42 ரன்னும், ஆர்.நப் 24 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆப்கான் ரன் உயர காரணமாகினர். 

அதன் பின் வந்த டெய்லண்டர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்தது. இலங்கை அணிக்கு எதிராக, அந்த அணியின் சொந்த மண்ணில் ரன் வேட்டை நடத்திய ஆப்கான் பேட்ஸ்மேன்களின் ஆசாத்திய ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். 

பெரிய இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, துவக்கத்தில் ஒரு ரன்னில் மென்னிஸ் ஆட்டமிழக்க, அதிர்ச்சிக்கு ஆளானது. அதன் பின் வந்த சண்டிமால் 14 ரன் , டிசில்வா 16, அசலங்கா 10 ஆகியோர் ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் துவக்க ஆட்டக்காரர் நிஷங்கா 71 ரன்னில் விளையாடி வருகிறார். 16 ரன் எடுத்துள்ள ஷனகா அவருக்கு ஒத்துழைத்து வருகிறார். ஒருவேளை இலங்கை வெற்றி பெற்றால், அது போராடி பெற்ற வெற்றியாகவே இருக்கும். அதுவே தோல்வியடையும் பட்சத்தில், அது ஆப்கானின் அபார வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைப்போலவே 234 ரன்களுக்கு இலங்கை அணியை வீழ்த்தி, 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது ஆப்கானிஸ்தான் அணி!

டாபிக்ஸ்