தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Watch Video: இந்திய கிரிக்கெட் அணிக்கான 3 புதிய ஜெர்சி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

Watch Video: இந்திய கிரிக்கெட் அணிக்கான 3 புதிய ஜெர்சி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

Karthikeyan S HT Tamil

Jun 01, 2023, 07:48 PM IST

New Team India Jersey: டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என இந்திய அணியின் 3 புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
New Team India Jersey: டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என இந்திய அணியின் 3 புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.

New Team India Jersey: டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என இந்திய அணியின் 3 புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக 2016-ல் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத் தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்து வந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL Final 2024: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் இருந்து வருகிறது. இதனிடையே, இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா சமீபத்தில் வெளியிட்டிருந்தார். ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் அடிடாஸ் நிறுவனத்தின் இந்த ஒப்பந்தம் தொடங்குகிறது. 2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் வரை 5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடிடாஸ் நிறுவனம் தயாரித்த இந்திய அணியின் புதிய ஜெர்சியை அந்நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே புதிய பயிற்சி ஜெர்சியை வீரர்கள், பயிற்சியாளர்கள் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என இந்திய அணியின் 3 புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி ஜெர்சிகள் மும்பை வான்கடே மைதானத்தின் ஆகாயத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. இதை சாலையில் இருந்து பார்த்தவாறு கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ம் தேதி லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்