தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Twitter: விரைவில் ட்விட்டரில் ஹாய்; ஹலோ சொல்லலாம்!

Twitter: விரைவில் ட்விட்டரில் ஹாய்; ஹலோ சொல்லலாம்!

May 10, 2023, 10:58 AM IST

Elon Musk: ட்விட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது.
Elon Musk: ட்விட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது.

Elon Musk: ட்விட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது ட்விட்டர் கணக்கு மூலம் வீடியோ மற்றும் ஆடியோ காலில் பேசும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ட்விட்டர் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை முழுமையாக வாங்குவதாக அறிவித்தார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் எலான் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக ஒப்பந்தம் உறுதியானது. ஒப்பந்தம் போட்ட சில வாரங்களில், ட்விட்டரை வாங்கவில்லை என்று அறிவித்தார். அப்புறம் ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை, இல்லை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார்.

இந்தநிலையில் தான் எலான் மஸ்க் ட்விட்டரை முழுமையாக வாங்கி கையகப்படுத்தியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை தன் வசமாக்கியதை குறிக்கும் விதமாக ட்விட்டர் அலுவலகத்துக்குள் கையில் ஒரு கைகழுவும் தொட்டியை தூக்கிக் கொண்டு சென்றார். அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். பின்னர் தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து எலான் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் விதமாக ட்விட்டரின் முழு கட்டுப்பாட்டை பெற்றுள்ளார். தனது ட்விட்டர் கணக்கின் பயோவை 'Chief Twit' எனவும் மாற்றியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் முதல் நாளிலேயே நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னணி நிர்வாகிகளை அதிரடியாக வெளியேற்றினார். இதையடுத்து அதிரடியாக பெரும்பாலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் ப்ளூ டிக் பெற கட்டணம் உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.  இதற்கிடையில் நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ட்விட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் ட்விட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி