Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!
May 20, 2024, 12:42 PM IST
Swiggy: பாலிவுட் நட்சத்திரம் டாப்ஸி பன்னு கடந்து சென்றபோது ஒரு ஸ்விக்கி ஊழியர் அவரைப் பொருட்படுத்தாமல் கடமையே முக்கியம் என்பது போல், அவர் வசித்த கட்டடத்தில் மற்றொரு வீட்டிற்கு உணவு விநியோகம் செய்ய சென்றது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்விக்கி நிறுவனமும் இதற்கு ரியாக்ட் செய்துள்ளது.
மும்பையில் பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னுவை ஸ்விக்கி ஊழியர் பொருட்படுத்தாமல், தனது கடமையே முக்கியம் என கடந்து செல்வது போன்ற வைரல் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி பரவியது. பொதுவாக பிரபலங்களாக இருப்பவர்களிடம் குறிப்பாக திரைப் பிரபலங்கள் என்றால் அவரிடம் சென்று செல்பி எடுக்க முனைவது பொதுவாக இருந்து வருகிறது. இதனால், பிரபலங்கள் எரிச்சல் அடைவார்கள். தமிழ் சினிமா நடிகர்கள் சிலர் கூட இதுபோன்ற சம்பவங்களை அவ்வப்போது எதிர்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அவர்களும் சக மனிதர்கள் என்ற எண்ணம் பொதுவாக ரசிகர்களுக்கு தோன்றுவதில்லை என்பதே உண்மை. அவர்களுக்கு உரிய தனியுரிமையையும் சுதந்திரத்தையும் ரசிகர்கள் கொடுப்பதில்லை. ஆனால், மும்பையில், ஸ்விக்கி ஊழியர் ஒருவர் நடிகை டாப்ஸியை கடந்து சென்றபோதும் எதுவும் ரியாக்ட் செய்யாமல் தனது பணியைச் செய்த வீடியோ இணையத்தில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
அந்த வீடியோவில்…
23 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஸ்விக்கி ஏஜென்ட் ஒரு உணவுப் பொட்டலத்தை டெலிவரி செய்ய ஒரு கட்டிட வளாகத்திற்குள் நுழைவதைக் காட்டுகிறது. வாயிலுக்கு வெளியே, புகைப்படக் கலைஞர்கள் நின்று, அவரை நகர்ந்து செல்லுமாறு கூறுகின்றனர். இதனால், குழப்பமடைந்த டெலிவரி ஏஜென்ட் வாயிலில் சிறிது நேரம் நின்று புகைப்படக் கலைஞர்களைப் பார்க்கிறார்.
டாப்ஸி பன்னு கட்டிடத்திலிருந்து வெளியே வரும்போதே ஏஜெண்டிடம் "சைடுல போங்க" என்று புகைப்படக் கலைஞர்கள் விரக்தியுடன் சொல்வது கேட்கிறது.
நடிகை டாப்ஸி, சன்கிளாஸ் மற்றும் கருப்பு ஆடை அணிந்து, ஸ்விக்கி ஏஜெண்ட்டை கடந்து செல்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் நடந்து சென்றனர்.
"டாப்ஸி ஜி, ப்ளீஸ் ஸ்டாப்" என்று ஒரு ஒரு புகைப்படக் கலைஞர் கூற கட்டிடத்தின் வாயிலில் இருந்து வெளியே வந்து ஒரு காரில் ஏற தயாராக இருந்த டாப்ஸி, "நான் நின்றுவிட்டால், நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு பார்ட்டி தருவீர்களா?" என்று நகைச்சுவையாக கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட் மற்றும் டாப்ஸி பன்னுவின் வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:
புகைப்படக் கலைஞர்களில் ஒருவர் தனது புதிய காருக்காக ஒரு பார்ட்டி நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று பதிலளித்தார். கார் புதிதல்ல என்று நடிகை டாப்ஸி கூறும்போது, மார்ச் மாதம் நடந்த தனது திருமணத்திற்கு ஒரு பார்ட்டி வைக்கலாம் என்று அந்தப் புகைப்படக் கலைஞர் ஹிந்தியில் கூறுகிறார்.
36 வயதான டாப்ஸி பன்னு தனது நீண்டகால காதலரான மத்தியாஸ் போவை மார்ச் மாதம் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார்.
ஸ்விக்கி முகவர் தனது வேலையை சிறப்பாக செய்ததாகவும், ஒரு பாலிவுட் நட்சத்திரத்தின் முன் நிற்காததற்காகவும் சமூக ஊடக பயனர்களிடமிருந்து பாராட்டுக்கு தகுதியானவர் என பயனர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
"ஹலோ Swiggy, இந்த டெலிவரி பார்ட்னர் தனது அர்ப்பணிப்புக்கு ஒரு ஊக்கத்தொகைக்கு தகுதியானவர்" என்று எக்ஸ் பயனர் திவ்யா கண்டோத்ரா டாண்டன் உணவு விநியோக நிறுவனத்தை டேக் செய்து எழுதினார்.
"மகிழ்ச்சி. தங்களது கடமையைச் செய்தால் வளரலாம்" என்று ஸ்விக்கி பதிலளித்தது.
"இந்த ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர் ஊடகங்களின் கூச்சலையும், டாப்ஸி பன்னுவையும் புறக்கணிப்பது போல வாழ்க்கையில் உங்கள் பிரச்சினைகளை புறக்கணிக்கவும்" என்று தன்மய் மாலிக் கூறினார்.
"அவரது அர்ப்பணிப்புக்காக அவரது ஊதியத்தை அதிகரிக்க வேண்டிய நேரம்" என்று மற்றொரு பயனர் கூறினார்.
டாபிக்ஸ்