UGC NET Exam 2023 : உதவி பேராசியர் மற்றும் ஜேஆர்எஃப் தகுதி பெற தேவையான யுஜிசி நெட் தேர்வுகள் தொடக்கம்
Jun 13, 2023, 10:48 AM IST
UGC NET Exam 2023 : உதவி பேராசியர்கள் மற்றும் ஜேஆர்எஃப் தகுதி பெற தேவையான நெட் தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கியது. இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்வுகள் வரும் 22ம் தேதியுடன் நிறைவடைகிறது.
உதவி பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் ஆகிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தகுதியை நிர்ணயிப்பதற்காக UGC-NET தேர்வுகளை நடத்தும் பணியை, தேசிய தேர்வு முகமையிடம் (NTA ) பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒப்படைத்துள்ளது. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இந்த தகுதித்தேர்வு மிக அவசியம் ஆகும்.
2018ம் ஆண்டு டிசம்பர் முதல் யுஜிசி-நெட் தேர்வுகளை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தி வருகிறது.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும்/அல்லது உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வான UGC -NETதேர்வுகள் இரண்டு தாள்களை உள்ளடக்கியது. தாள்-I மற்றும் தாள்-II என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும்.
தாள் 1ல் 100 மதிப்பெண்களுக்கு பொதுவான கேள்விகள், ஆராய்ச்சி, ஆசிரியர் பணி தொடர்புடைய கேள்விகள் கேட்கப்படும். தாள் 2ல் அவரவர் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவில் இருந்து 200 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி நிர்ணயிக்கப்படும். தேர்வுகள் மூன்று மணி நேரங்கள் நடைபெறும். தேர்வுகளை தற்போது என்டிஏ காலை, மதியம் என இருவேளைகளிலும் நடத்தி வருகிறது.
உதவிப் பேராசிரியர் பணியை விட JRF பெறுவதற்கு கூடுதல் மதிப்பெண்கள் பெறவேண்டும். இடஒதுக்கீடு அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்குமான மதிப்பெண்கள் வேறுபடும்.
UGC-NET தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை (ஜூன் & டிசம்பர்) ஆகிய மாதங்களில் நடத்தப்படுகிறது. யுஜிசி-நெட் தேர்வு சுழற்சியை முறைப்படுத்த, தேசிய தேர்வு முகமை (என்டிஏ), யுஜிசியின் ஒப்புதலுடன் யுஜிசி நெட் 2023 தேர்வுகளை ஜூன் 13ல் நடத்துகிறது
முதற்கட்டமாக இன்று இன்று தேர்வுகள் துவங்கியுள்ளது. இந்த தேர்வுகள் 17ம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்டமாக 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை தினமும் இரண்டு ஷிப்டுகளாக தேர்வுகள் நடைபெறும்.
முதல் கட்ட தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் அட்மிட் கார்டுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால், ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக்கு மாணவர்கள் அட்மிட் கார்ட், அதில் கொடுக்கப்பட்டுள்ள வண்ண புகைப்படம் 2, அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்